பிப்.16 அன்று மாசி சதுர்த்தசி: ஸ்ரீ நடராஜர் மகாபிஷேகத்தில் சர்ச்சை ஏன்?

செய்திகள்

சித்திரை, ஆனி, மார்கழி – மூன்றும் நட்சத்திரங்களையும், மாசி, ஆவணி, புரட்டாசி –  இம்மூன்றும் வளர்பிறை சதுர்தசியிலும் ஸ்ரீ நடராஜருக்கு மகாபிஷேகம் நடத்தப் பெறும். இதுதான் நியதி. ஸ்ரீ நடராஜர் கோயிலிலும், கடைபிடித்து வரும் பாரம்பர்ய பழக்கம்.

 

மற்ற ஊர்களில் எல்லாம் பெரும்பாலும் பகலில் அபிஷேகம் நடைபெறும். ஆனால் சிதம்பரத்தில் ஆனி, மார்கழி ஆகிய இரண்டு மாதங்கள் விடியற்காலையிலும், மற்ற சித்திரை, ஆவணி, மாசி மாதங்களில் மாலை வேளையிலும் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் செய்யப் படுகிறது. அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் உரிய நட்சத்திரமோ அல்லது  திதியோ அவசியம்
இருக்கவேண்டும் .

16.02.2011 புதன் கிழமை தான் அபிஷேக நேரத்தில் சதுர்தசி உள்ளதால், பொது தீட்சிதர்கள் பொதுக்கூட்டத்தில் பல மாதங்களுக்கு முன்னதாகவே 16.02.2011தான் மகாபிஷேகம் என்று தீர்மானம் நிறைவேற்றி ஜப பாராயணமும் தொடங்கி விட்டது. ஆனால் சிலர் சுய லாபத்துக்காக மாசியில் சதுர்தசி திதியே இல்லாத நேரத்தில் ஸ்ரீநடராஜர் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விதண்டாவாதம் செய்து வருகிறார்கள். இது முறையற்றது.  மேலும் பாரம்பரியமானதும் இல்லை.

ஓம் திருச்சிற்றம்பலம்

உமாநாத தீக்ஷிதர், சிதம்பரம்

Leave a Reply