சிதம்பரம் கோயிலில் மார்ச் 2-ல் நாட்டியாஞ்சலி தொடக்கம்

செய்திகள்

நாட்டியாஞ்சலியில் பத்மா சுப்பிரமணியன், ஊர்மிளா சத்யநாராயணன், நந்தினி ரமணி, ப்ரியா முரளி உள்ளிட்ட பிரபல கலைஞர்களும், தில்லி, கேரளம், கொல்கத்தா, குவாஹாட்டி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்தும், மலேசியா, துபை, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்களும் நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி தொடக்க நாளன்று இரவு 10.45 முதல் 12.15 மணி வரை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்கள் பரதம், மோகினி ஆட்டம், ஒடிஸி, கதகளி, குச்சிபுடி, கதக், மணிப்புரி, சத்ரீயா ஆகிய நாட்டியஞ்சலிகளை ஒரே நேரத்தில், ஒரே மேடையில் நிகழ்த்துகின்றனர்.

பிப்ரவரி 2-ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 5.30 மணிக்கு தொடங்கி விடிய,விடிய 3-ம் தேதி அதிகாலை 5 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மற்ற நாள்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும்.

தினமும் இரவு 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்வுகளை பொதிகை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *