காரடையான் நோன்பு சரடு அணிந்து கொள்ளும் போது சொல்ல வேண்டிய சுலோகம்

செய்திகள்

தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் |
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா ||
இதன் பொருள் :
என் கணவனுக்கு நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் அனைத்து நல்ல பலன்களையும் அருள வேண்டும். அதற்காக நோன்பு நோற்று இந்தச் சரடை நான் அணிந்துகொள்கிறேன். என் வாழ்க்கை சுப சௌபாக்கியங்களோடு திகழ வேண்டும்.
… என்ற பொருள் படும் இந்த சுலோகத்தைச் சொல்லி சரடு அணிந்துகொள்வர்.
திருமணமாகாத கன்னிப் பெண்களும் இதைச் சொல்லி நோன்புச் சரடு அணிந்து கொண்டால், அன்னை காமாட்சியின் அருளால் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர்!
– தங்கம் கிருஷ்ணமுர்த்தி, லண்டன்.