திருப்பதி திருமலை: தாலபாக்கம் அன்னமாசார்யாவின் 508-வது நினைவு நாள் உற்ஸவம்

செய்திகள்

அன்னமய்யா ஏழுமலையான் மீது கொண்ட அதீத பக்தியால் திருமலையிலேயே தங்கி பெருமாளின் மீது சுமார் 32 ஆயிரம் பக்தி சங்கீத கீர்த்தனைகளை பாடினார். இவரது சங்கீத கீர்த்தனைகள் பல ஆண்டுகளுக்கு முன் திருமலை கோயில் அறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இப்பொழுது பாடப்படும் ஏழுமலையானை பற்றிய பாடல்கள் அனைத்தும் இவரது கீர்த்தனைகளே. எனவே இவரது நினைவாக கோயில் நிர்வாகம் சார்பில் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதோடு, ஆண்டுதோறும் உற்ஸவம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அன்னமய்யாவின் 508 -வது நினைவு நாளையொட்டி மார்ச் 30-ம் தேதி திருமலையில் ஆஸ்தான மண்டபம் மற்றும் நாராயணன் தோட்டம் ஆகிய இடங்களில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Leave a Reply