வேளிமலை குமாரசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

செய்திகள்

வியாழக்கிழமை காலை மணிக்கு உஷபூஜை, அபிஷேகம், அலங்காரபூஜை நடைபெற்றன. பின்னர் சுவாமி கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினார். பிற்பகலில் சுவாமி வள்ளி நாயகியுடன் வள்ளி சுனை மலையில் இருந்து பூ பல்லக்கில் எழுந்தருளினார்.

வள்ளியை சுவாமி அழைத்து வரும் வழியெல்லாம் குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போரிடுவது போன்று சித்தரித்து காட்டப்பட்டது.

குறவர் படுகளம்: கோயில் முன்பு மாலையில் குறவர் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண தமிழகம் மட்டுமன்றி கேரள மக்களும் திரளாக வந்திருந்தனர். பக்தர்களுக்கு தேன், தினை மாவு, புட்டு, அமிர்தம் ஆகியவை வழங்கப்பட்டன.

முன்னதாக சுவாமியும் வள்ளியும் பூ பல்லக்கில் வரும் போது நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் முன்பு விளக்கேற்றி கனிகள் படைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply