ஸ்ரீவீரமாகாளியம்மன், ஸ்ரீமுனீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செய்திகள்

 கும்பகோணம் பழைய அரண்மனைத் தெருவில் ஸ்ரீவீரமாகாளியம்மன், ஸ்ரீமுனீஸ்வரர் எழுந்தருளி கோயில் உள்ளது.
 இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.40 மணிக்கு நடைபெற்றது.
 மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், பூஜையுடன் விழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை வரை 4 காலம் யாகபூஜைகள் நடைபெற்று, கடங்கள் புறப்பட்டு முனீஸ்வரர் ஆலய விமான மகா கும்பாபிஷேகமும், மூல மூர்த்தி மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து வீரமாகாளியம்மன் ஆலய விமான கும்பாபிஷேகமும், மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து மகா அபிஷேகம் நடைபெற்றது.

Leave a Reply