திருமலையில் ஏப்ரல் 13-ல் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்

செய்திகள்

இதனையொட்டி 12-ம் தேதி வசந்த உற்சவ மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையும், 13-ல் வசந்த உற்சவம் ஆகிய கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. ஸ்ரீராம நவமியையொட்டி ராமர், சீதாதேவி மற்றும் லட்சுமணன், ஹனுமன் ஆகியோர் திருமலையில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து, பின்னர் கோயிலுக்குள் வந்தடைவர். இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத பண்டிதர்கள் ஸ்ரீராமர் ஜனனத்தை ஓதுவர். அடுத்த நாள் இரவு 8 மணிக்கு தங்க வாசல் முன்பு ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் விமரிசையாக நடக்க உள்ளது.

இதில் திருமலை ஜீயர், தலைமை அர்ச்சகர்கள், கோயில் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave a Reply