கரியமாணிக்கப் பெருமாள் கோயில் தேரோட்டம்

செய்திகள்

விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. 5 ஆம் திருவிழாவையொட்டி இரவு 8 மணிக்கு கருடசேவை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் சுவாமி தேருக்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனர். பின்னர் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 10 மணிக்கு பூம்பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நடைபெற்றது. சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

சித்திரைத் திருவிழா கொடியேற்றம்:

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏப். 14 ஆம் தேதி காலை 5 மணிக்கு முருகப்பெருமானின் உருகுச் சட்டசேவையும், அன்று மாலை ஆறுமுகப்பெருமாள் சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில் திருநெல்வேலிக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

ஏப். 17 ஆம் தேதி காலை 6 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது. 18 ஆம் தேதி காலை 10 மணிககு தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் கண்காணிப்பாளர் செய்து வருகிறார்.

Leave a Reply