மே 14-ல் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் பிரம்மேற்ஸவம்

செய்திகள்

20-ம் தேதி காலை திருக்கல்யாண நிகழ்வும், மாலை வசந்த உற்சவமும் நடைபெறுகிறது.

இதில் முக்கிய விழாவான ரத உற்சவம் 23-ம் தேதி நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாள் இரவும் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்வும் நடைபெறும்.

கோவில் குறித்த தகவல்:

இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை லக்ஷ்மி நரசிம்ம சுவாமியும் ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கின்றனர். சென்னை-விழுப்புரம்- திருச்சி ஜி.எஸ்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலம் விழுப்புரத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்ட கோணம் எனப்படும். நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி பரிகலாசூரனை அழித்து மன்னன் வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது. பரிகலாசூரன் என்ற அசுரனை அழித்ததால், இத்தலம் பரிக்கல் எனப்படுகிறது.

தற்போதய பெயர் : பரிக்கல்

மூலவர் : லக்ஷ்மி நரசிம்ம சுவாமி

தாயார் : கோமளவல்லி தாயார்

தல விருட்சம் : மகிழம்

தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 8.00 மணி வரை.

சிறப்பு பண்டிகைகள் : நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாத பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி

தொடர்பு : கிருஷ்ண மூர்த்தி பட்டர் – 96004 55395

Leave a Reply