ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் ஆலய தேர்த் திருவிழா

செய்திகள்

ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேஷவப் பெருமாள் மற்றும் ராமானுஜர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ விழா, சித்திரை மாதம் நடைபெறும்.

இதில் ஆதிகேஷவ பெருமாளுக்கு பத்து நாள்களும், ராமானுஜருக்கு பத்து நாள்களும் உற்சவம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 18-ம் தேதி ஆலையத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் பத்து நாள்கள் ஆதிகேசவப் பெருமாளுக்கு உற்சவம் நடைபெற்றது.

அதன்படி ஆதிகேசவப் பெருமாள் தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ராமானுஜருக்கு பத்து நாள்கள் உற்சவம் தொடங்கியது.

இந்நிலையில் ராமானுஜர் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமானுஜர் காலை 7.15 மணியளவில் அலங்கரிக்கப்பட்டு மேள வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கைகள் வெடிக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதிஉலா வந்தார்.

தேர், காந்திசாலை, சின்னக்கடை தெரு, திருமங்கையாழ்வார் தெரு வழியாக மதியம் 12.10 மணிக்கு நிலைக்கு வந்தது.

விழாவில், ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Leave a Reply