கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி

செய்திகள்

இக்கோயிலில் நவக்கிரங்களில் முதன்மை மூர்த்தியான ஸ்ரீ கேது பகவான் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

ஞானகாரகன் எனப்படும் ஞானத்திற்கு அதிபதியான கேது பகவான் ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.

அதேபோல் நிகழாண்டு வைகாசி மாதம் 2 ம் நாள்,16 ஆம் தேதி காலை 9.56 மணிக்கு கேது பகவான் மிதுன இராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

முன்னதாக கேது பகவானுக்கு திங்கள்கிழமை காலை 7.15 மணி முதல் மகா பூர்ணாஹீதி, தீபாராதனை, காலம்-2, சகல திரவிய அபிஷேகம், கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

மேலும், கேது பெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம்,ரிஷபம், மிதுனம், சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மகரம்,கும்ப ராசிக்காரர்கள் கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *