சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி பூஜை நாளை நிறைவு

செய்திகள்

வைகாசி மாதப் பிறப்பான ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஆனால், கடந்த இரு நாள்களாக கடுமையான வெயில் காரணமாக, பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இல்லை.

இந்த நிலையில், வியாழக்கிழமையுடன் வைகாசி மாத பூஜை நிறைவு பெறுவதால், அன்றைய தினம் காலை நெய் அபிஷேகம் செய்யப்பட்டு, களபாபிஷேகம், உச்சி பூஜை வழிபாடு நடைபெறும். இரவு படி பூஜை நடத்தி, ஹரிவராஸனம் பாடி கோவில் திருநடை சாத்தப்படும்.

சபரிமலை வனப் பகுதியில் சில நாள்களாக பகலில் கடுமையான வெயிலும், மாலையில் காற்றும் வீசி வருவதால், தென்மேற்குப் பருவமழை உரிய காலத்தில் பெய்யும் சூழ்நிலை உள்ளது.

இப்போது மழை இல்லாததால், பம்பை நதி வறண்டு காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *