திருமலையில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்த கட்டண சேவை டிக்கெட்டுகள் ரத்து

செய்திகள்

திருமலை கோயிலில் நடைபெறும் தினச்சேவை, சிறப்பு பூஜை மற்றும் வாராந்திர பூஜைகளில், கட்டணம் செலுத்தி பக்தர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, முன் கூட்டியே செயல் அலுவலர் பெயருக்கு வரைவு காசோலை அனுப்பி பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்த முறையின் படி, நடப்பு தேதியிலிருந்து சுமார் 50 வருடங்கள் வரை கலந்துகொள்ள பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவு செய்ததில் சில முறைகேடுகள் நடந்ததாக கோயில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்ததையடுத்து, அது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

அதில், அதிக எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்யப்பட்ட 23 ஆயிரத்து 284 டிக்கெட்டுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் வஸ்திரம், பூர்ணாபிஷேகம், கஸ்தூரி கிண்ணம், புனுகு கிண்ணம், அஸ்டதல பாத பிரம்மோற்சவம், சுப்ரபாதம், தோமாலை, அபிஷேகம், அர்சனை ஆகிய சேவைகளுக்கு ஒரு நபருக்கு இனி, 5 டிக்கெட்டுகளும், சகஸ்ர கலாசாபிஷேகம், திருப்பாவடை ஆகிய சேவைகள் 2 டிக்கெட்டுகள் வரை மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

நடப்பு பதிவில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 284 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் கடந்த மாதம் வரை 381 பேர் தரிசனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply