வனசுந்தர், புவனசுந்தரர் யார்?

கேள்வி-பதில்கள்

எது “யோக க்ஷேமம்” ?

Iயோக க்ஷேமம் அர்த்தம்

யோகம் = கையில் இல்லாததைப் பெறுவது.
க்ஷேமம் = கிடைத்ததைக் காப்பது.

யோகம் = பகவானை அடைவது.
க்ஷேமம் = அதற்குரிய சாதனைகளைக் காப்பது.

ஆதாரம் :
ஶ்ரீமத் பகவத்கீதா,
(9—22.)

பகவானுக்கு
பத்ரம், புஷ்பம், பலம், தோயம்” அர்ப்பணித்தவர்கள் யார் ?

பகவானுக்கு

பத்ரம்/இலை” அர்ப்பணித்தவர்கள் = விதுரர், திரௌபதி.

புஷ்பம் = கஜேந்திரன்.

பலம்/பழம் = சபரி.

தண்ணீர் = ரந்திதேவன்.

வன சுந்தரர்”, புவனசுந்தரர்”
இவ்வாறு வர்ணிக்கப்படுவது யார் ?

ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் :
ஶ்ரீராமர்ர்்்
வனசுந்தரர்

ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம் :
(10–52–37.)
ருக்மிணி வாக்கு :
ஶ்ரீகிருஷ்ணர்-
“புவனசுந்தரர்”.

“ப்ராண அக்னிஹோத்ரம்” என்றால் என்ன ?

ஸாம வேதம்—-
“சாந்தோக்ய உபநிஷத் வாக்கு” :
(மந்திரம் :
5—19 to 24.)

உண்பதை அக்னிஹோத்ரமாகச் செய்வதே “ப்ராண அக்னிஹோத்ரம்” என்பது.

“ப்ராணாய ஸ்வாஹா”,

“வ்யானாய ஸ்வாஹா”,

“அபானாய ஸ்வாஹா”,

“ஸமானாய ஸ்வாஹா”,

“உதானாய ஸ்வாஹா”,

உண்மையான ப்ராண அக்னிஹோத்ரம் செய்பவன், எல்லா உயிர்களுக்கும் உணவு அளிக்கிறான்.

அவ்வாறு அவனது ப்ராண அக்னிஹோத்ரம் எல்லா உயிர்களுக்கும் உணவு அளிப்பதால், அவனது க்ரியையை எல்லா உயிர்களும் காத்து நிற்கின்றன.

 

ப்ராண அக்னிஹோத்ரம் என்பது “பரிஸேஷணம்”.

ஆதாரம் :
“சாந்தோக்ய உபநிஷத்”.
பக்கம்—463 to 474.
ஶ்ரீராமகிருஷ்ண மடம்,
மயிலாப்பூர்,
சென்னை publication.

5.”கர்மா, பக்தி, ஞானம்” இவற்றுக்கு என்ன தேவை ?

 

கர்மா = “காலம், தேசம், கர்த்தா” எல்லாம் அவசியம் இருக்கும்/ உண்டு.

பக்தி = இவை எல்லாம் தளரும்.

ஞானம் = இவை எல்லாம் இருக்காது.

 

“கர்மா, ஞானம்” இரண்டிலும் “பக்தி” உண்டு.

பக்தியுடன் செய்வது “கர்மா”

“பக்தி” பழுத்தால் அது “ஞானம்”.

கர்மா, ஞானம் இரண்டிற்கும் “பாலம்/Bridge” தான் “பக்தி”.

முதன்முதல் “அங்க பிரதக்ஷிணம்” செய்தவர்கள் யார் ?*

முதன்முதல் “அங்க பிரதக்ஷிணம்” செய்தவர்கள் :

ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் :

காட்டில் பகவான் ஶ்ரீராமர் படுத்த இடத்தை குஹன் காண்பிக்க, அங்கு பரதன் விழுந்து, புரண்டு அழுதது.

ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம் :
(10—38—26.)
கம்ஸன் உத்தரவுப்படி, ஶ்ரீகிருஷ்ணரை அழைத்து வர அக்ரூரர் கோகுலம் போகும்போது, வழியில் மண்ணில் ஶ்ரீகிருஷ்ணரின் திருவடி அடையாளம் மற்றும் தாமரை முதலிய ரேகைகளைக் கண்டு விழுந்து புரண்டது.

.முதன் முதல் “Dialysis patient” யார் ?

உலகின் முதல் Dialysis patient “பீஷ்மர்”.

தமோ குணம்” :

திருதராஷ்டிரன் சபையில் திரௌபதி துச்சாதனனால் அவமானப்படுத்தப்படும்போது நீதி கேட்கும் சமயம்.

ரஜோ குணம்” :

கௌரவர்களின் சேனாதிபதியாக குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுடன் யுத்தம் செய்யும்போது.

ஸத்வ குணம்” :

யுத்த களத்தில் அர்ஜுனனின் அம்புகளால் உடல் துளைக்கப்பட்டு இவ்வளவு காலம் துரியோதனன் போட்ட உணவை உண்டதால் ஏற்பட்ட கெட்ட ரத்தம் வெளியேறியவுடன் ஸத்துவ குணம் ஏற்பட்டு, ஶ்ரீகிருஷ்ணர் உத்தரவின்படி பாண்டவர்களுக்கு

ராஜ தர்மம்,
மோக்ஷ தர்மம்,
ஸ்த்ரீ தர்மம்,
ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்

போன்றவற்றை உபதேசித்தார்.

ச்ராத்தத்தில் முக்கியமான மூன்று எது ?

ச்ராத்தத்தில் முக்கியமான மூன்று :

ஹோமம்
பிராமண போஜனம்,
பிண்ட ப்ரதானம்”.

ஹிரண்ய ச்ராத்தம்” Concept வந்தது எப்படி ?

ஹிரண்ய ச்ராத்தம் தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து ஒன்றரை முகூர்த்தத்திற்குள், அதாவது 36 நிமிஷத்திற்குள் ச்ராத்தம் செய்ய வேண்டும்.
அதற்கு அவகாசம்/நேரம் போதாது.
அப்போது மட்டும்தான் “ஹிரண்ய ச்ராத்தம்” செய்யலாம்.
(ஹிரண்யம் என்றால் தங்கம் என்று பொருள்.)

அத்வைத பக்தி”, த்வைத பக்தி” என்ன வித்யாஸம் ?

அத்வைத பக்தி
பகவான் கல்கண்டு.

த்வைத பக்தி
நீ கல்கண்டாய் இரு.
நான் எறும்பாய் இருக்கிறேன்”

இதன் விளக்கம் :

அத்வைத தத்துவத்தின்படி பிரம்மம்- நிர்க்குணம்”.
கல்கண்டின் சுவை கல்கண்டிற்குத் தெரியாது.

கல்கண்டின் சுவை, சுவைத்தால்தான் தெரியும்.

அதாவது, த்வைத பாவனையில் இருந்தால்தான் கல்கண்டின் சுவையை அறிய/அனுபவிக்க/ஆனந்திக்க முடியும்.

அத்வைதத்தில் லயித்த பல மஹான்கள் த்வைத உருவ வழிபாட்டில் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறார்கள்.

உதாரணம் :

ஶ்ரீபாகவத மஹாபுராணத்திற்கு பாஷ்யம்/உரை எழுதிய ஶ்ரீஶ்ரீதர ஸ்வாமிகள் ஒரு நரசிம்ம பக்தர்.
அவரது அருளினாலேயே அவர் பாஷ்யம் எழுதியதாக பெரியோர் வாக்கு.

Leave a Reply