ராகுகாலம் ஞாபகத்தில் கொள்ள எளிய வழி!

ஆன்மிக கட்டுரைகள்

நாம் நல்ல காரியம் செய்யும் பொழுது ராகு காலம் எமகண்டம் முதலியவற்றை பார்க்கிறோம் பஞ்சாங்கம் பார்ப்பதை தவிர்த்து இதனை ஒரு எளிய வழியில் ஞாபகம் வைத்துக்கொள்ளலாம் அதற்கான பாடல்..

திருமால் சன்னதியில் வெண்கதிர் புகுத்தி விளையாட செய்வது ஞாயிறா?

திருமால் என்பதில் முதல் எழுத்து தி திங்கட்கிழமை ஏழரை மணி முதல் 9 மணி வரை ராகு காலம் அடுத்ததாக சன்னதி என்ற சொல்லின் முதல் எழுத்து ச

சனிக்கிழமை 9 முதல் பத்தரை மணி வரை ராகு காலம் அடுத்ததாக

வெண்கதிர் என்பதன் முதல் எழுத்து வெ வெள்ளிக்கிழமை பத்தரை மணியிலிருந்து 12 வரை

புகுத்தி என்பதன் முதல் எழுத்து பு புதன்கிழமை 12 மணியிலிருந்து 1 மணி வரை அடுத்ததாக விளையாட என்ற சொல்லின் முதல் எழுத்து வி 1 மணியிலிருந்து 3 மணி வரை

செய்வது என்பதன் முதல் எழுத்து செ செவ்வாய்க்கிழமை மூன்றிலிருந்து நான்கு நாலரை மணி வரை

ஞாயிறு என்பதன் முதல் எழுத்து ஞா நாலரை மணியிலிருந்து 6 மணி வரை. இவ்வாறு இந்த பாடலை நினைவு கொண்டால் வரிசையாக நாம் ராகு காலத்தை கணக்கிடலாம்.

Leave a Reply