வைகுண்டபதியா? கைலாசபதியா? இதயம் அறியும் தெய்வம்!

ஆன்மிக கட்டுரைகள்

shiva and vishnu

ஒவ்வொரு இதயம் இறைவனின் கரத்தில் உள்ளது காலம் சத்தம் பலம் எல்லாம் இறைவனிடம் அவர் கரத்தில் இருப்பதாக உருவகப்படுத்துவதுதான் இவை எனலாம்.

வைஷ்ணவர்களின் விஷ்ணுவை வணங்குகிறார்கள் சைவர்கள் சிவபெருமானே வணங்குகிறார்கள் ஆனால் இரண்டு பேரும் திருப்பதிக்கு போகிறார்கள் வைஷ்ணவர்கள் திருமாலை வேங்கடரமணா என்று அழைத்து ஆனந்த படுகிறார்கள் சைவர்கள்

வெங்கடேஸ்வரா என்று அழைத்து மகிழ்கிறார்கள் வெங்கடரமணா வெங்கடேஸ்வரா என்பதில் பெயர் தான் வித்தியாசமே தவிர தெய்வம் ஒன்றுதான். ரமணா என்பது வைணவ சித்தாந்தம் ரமணா என்றால் ரமிக்கிறது ஆனந்தப்பட வைக்கிறது என்று பொருள்.

ஈஸ்வரன் என்றால் சகல ஐஸ்வர்யங்களையும் உடையவன். என்று அர்த்தம் ஈஸ்வரனுக்கு பசுபதி என்று பெயர். பசுவுக்கு எல்லாம் அதிபதி என கொள்ளலாம். வைஷ்ணவர்கள் கோபாலா என்று அழைக்கின்றனர் கோபாலா பசுபதி இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். பசுபதி என்று சைவர்கள் அழைப்பதும் கோபாலா என்று வைஷ்ணவர்கள் அழைப்பதும் ஒரே தெய்வத்தை தான். ஈஸ்வரன் கையில் இருப்பது உடுக்கை திரிசூலம் இதிலும் வைஷ்ணவ தத்துவத்தை காணலாம். உடுக்கை என்பது சப்தம்.

சப்தமயி  என்பதை குறிப்பிடும் விஷ்ணுவின் சங்கமே இங்கு உடுக்கை என விவரிக்கப்படுகிறது திரிசூலம் என்பது முக்காலத்திலும் மாறாத ஒன்று என உருவகம். விஷ்ணுவின் காலச்சக்கரம் இங்கு திரிசூலம் ஆக வர்ணிக்கப்படுகிறது. தெய்வத்தை பொறுத்தவரை நாம் பலவகையில் வழிபட்டு வருகிறோம்.

ஆனால் தெய்வம் ஒன்றுதான் என் யாருடைய வழிபாட்டையும் விமர்சிக்காமல் எல்லா தெய்வங்களையும் மதித்து நடப்பதே மேன்மையானது.

Leave a Reply