கட்டுபட்டவனால் கட்டை அவிழ்க்க முடியுமா?

ஆன்மிக கட்டுரைகள் கதைகள்!

சாதக வர்மன் என்ற மன்னன் சுகர் ஏழு தினங்கள் பாகவதம் கூற கேட்டு பரீக்ஷித் மன்னன் ஆத்ம ஞானம் பெற்றது போல் தானும் ஆத்மஞானம் பெற விரும்பினார்

உடனே தேர்ச்சி பெற்ற பண்டிதர் ஒருவரை வரவழைத்து தக்க சன்மானங்கள் கொடுத்து அவரிடம் பாகவதம் கேட்டான் ஆயினும் அவனுக்கு ஆத்ம ஞானம் கிடைக்க வல்லை பண்டிதரிடம் காரணம் கேட்டால் பதில் சொல்ல தெரியாமல் யோசனையுடன் வீட்டிற்குச் சென்றார்

தந்தை யோசனையில் இருப்பதைக் கண்ட பண்டிதரின் மகள் காரணம் கேட்டால் அரசனின் சந்தேகத்தை பற்றி சொன்னார் அதனை கேட்ட சிறுமி அரசனின் ஐயத்தை தான் நீக்குவதாக கூறி மறுதினம் அரசவைக்குச் சென்றாள்

அரசனை கண்ட சிறுமி பணிவுடன் வணங்கி அரசே தாங்கள் மனதில் தோன்றிய சந்தேகத்தை போக்கவே என் தந்தைக்கு பதிலாக இங்கு வந்துள்ளேன் என்றால ஆனால் ஒரு நிபந்தனை சிறிது நேரம் தங்களை இந்தத் தூணில் கட்டி வைக்க வேண்டும் என்று கூறினாள்.

அரசனும் அவ்வாறே தன்னை கட்டிவைக்க ஏவலருக்கு உத்தரவிட்டான்‌ அச்சிறுமி தன்னையும் அவ்வாறு ஒருத்துணுடன் கட்ட சொன்னாள். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

பின்னர் அச்சிறுமி அரசனைப் பார்த்து அரசே என்னை கட்டில் இருந்து விடுவியுங்கள் என கேட்டாள்.

அதற்கு அரசன் நானே கட்டுப்பட்டு உள்ளேன் எவ்வாறு உன்னை விடுவிப்பது என்று வினவினான்.

இதுதான் தங்கள் கேள்விக்கான விளக்கம். சுகமுனிவர் பந்தங்களிலிருந்து விடுபட்டவர் என்பதால் அவரால் பரிட்சித்துக்கு ஆத்மஞானம் கிடைக்கச் செய்ய முடிந்தது. ஆனால் என் தந்தையோ சம்சார பந்தங்களில் சிக்கியிருப்பவர் அவரால் எப்படி தங்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்க செய்ய முடியும் என்றாள்.

அரசனும் சந்தேகம் நீங்கி தெளிவு பெற்றான்.

kaikadduthal

Leave a Reply