பூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”

ஆன்மிக கட்டுரைகள்

பூஜையில் பிரதான பிரசாதமான ‘காலா’
– ஜெயஸ்ரீ எம்.சாரி,
நாக்பூர்

மஹாராஷ்டிர மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி, கைத்தட்டிக் கொண்டே, அந்தந்த தெய்வங்களுக்கான ஆரத்திப் பாடல்களை பாடி பூஜையில் ஈடுபடுவர்.

கிருஷ்ண பகவான் தன் தோழர்களுடன் சேர்ந்து உணவு அருந்தும்போது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பண்டம் எடுத்து வரச் செய்து, அதை கலவையாக்கி உண்டதாக ஐதீகம். ‘காலா’ என்றால் ‘ கலவை’ என்று பொருள்.
சோளப் பொறி, அவல், பழங்கள், வெள்ளரிக்காய், தயிர், உப்பு, பச்சை மிளகாய், சக்கரை, இனிப்பு எலுமிச்சை ஊறுகாய், கொப்பரைத் தேங்காய் முதலியவற்றை கலந்து ‘காலா” தயாரித்து பிரசாதமாகப் படைப்பர்.
அனைத்து சுவைக் கொண்ட ‘காலா’ வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் சூழ்நிலைகளையும் விளக்குவதாக உள்ளது.
‘காலா’ பிரசாதம் அனைத்து பூஜைகளிலும் பிராதனமாக உள்ளது.

Leave a Reply