காளையும் மனித முகமும் சேர்ந்த அதிசய நந்தி!

ஆன்மிக கட்டுரைகள்

முன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோயில்!

சிவனின் வாகனமான நந்தி பொதுவாக சிவன் கோயிலில் சிவனுக்கு முன் அமைந்திருப்பதை பார்த்திருப்போம். மகாராஷ்டிரா பாடேஸ்வர மகாதேவ் திருக்கோயிலில் வித்தியாசமான நந்தி சிலை அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவின், சதாரா மாவட்டத்தில் உள்ள பாடேஸ் கிராமத்தில் அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றும், தனித்தன்மையுடனும் இருக்கின்றன. இங்குள்ள ஒரு அதிசய நந்தியே இதற்கு சான்றாக கூறலாம்.

இங்குள்ள ஒரு சிறிய குகையில் அமைந்துள்ள நந்தி முன் புறம் பார்க்க மனித வடிவில் யோக நிலையில் அமர்ந்திருப்பது போன்றும், அதன் பின்புறம் பார்த்தால், நாம் சாதாரணமாக சிவ தலங்களில் பார்க்கக்கூடிய நந்தி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தையும் கொடுக்கும் அளவிற்கு வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது.

பக்கவாட்டில் பார்த்தால் நந்தியின் முன்னங்கால், மனித முன்னங்கால் இரண்டும் பொருந்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நந்தி சிலை 7 கரங்களுடன் காணப்படுகின்றது. வலது பககத்தில் நான்கு கைகளும், இடது பக்கத்தில் மூன்று கைகளுடன் காணப்படுகின்றது. வலது மேல் கையில் மழுவும், நடு கையில் அம்பு, கீழே உள்ள அருள்வது போலவும், நடுவில் மற்றொரு கை சிவ லிங்கத்தை தன் கையில் வைத்திருப்பதாக இருக்கும்!

Leave a Reply