அன்னப்பன்பேட்டையில் குருபூஜை விழா

ஆன்மிக கட்டுரைகள்

அன்னப்பன்பேட்டை தாயுமானவ சுவாமிகள் மடத்தில் குரு பூஜை விழா நடந்தது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அன்னப்பன்பேட்டை கிராமத்தில் தாயுமானவ சுவாமிகள் மடம் உள்ளது

இதில் திருவாவடுதுறை 24ஆவது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் குருமுதல்வர் தாயுமானவ சுவாமிக்கு குரு பூஜை நடந்தது முன்னதாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தாயுமானவ சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது அதனைத்தொடர்ந்து திருவாவடுதுறை 24 வது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்கி பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கினார் தொடர்ந்து சிவஞான. கொலு காட்சியில்

திருவாவடுதுறை 24ஆவது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அன்னப்பன்பேட்டை தாயுமான சுவாமிகள் குரு பூஜையில் கலந்துகொண்டு அருளாசி வழங்கியபோது

சைவ. சிந்தாத்தில் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் அது பெரிய புண்ணியத்தைத் தரும்

வாழ்க்கையில் பிற உயிர்களுக்கு தீங்கு செய்ய கூடாது பிற உயிரை கொன்று உண்ணுதல் கூடாது வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று திருக்குறள் கூறுவதுபோல திருக்குறளைப் படித்து அதன்படி நல்வழியில் வாழ வேண்டும் அப்போது தான் வாழ்க்கை சிறக்கும் இன்பமாக இருக்கும் நாம் வினை இல்லாமல் வாழலாம்

தமிழகத்தில் திருவாவடுதுறை தருமபுரம் உள்ளிட்ட பதினெட்டு ஆதீனங்கள் உள்ளன அங்கு நடைபெறும் குரு பூஜையில் தவறாது கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டும்

அப்போது நமக்கு குருவின் ஆசியும் மனநிம்மதியும் சந்தோஷமான வாழ்வும் கிடைக்கும் நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யவேண்டும் என்றார்

Leave a Reply