ஸித்திகள் அத்யாத்ம வாழ்வில் மேல்நிலையைக் குறிக்கிறதா? ஆச்சார்யாள் பதில்!

ஆன்மிக கட்டுரைகள்

abinav vidhya theerthar
abinav vidhya theerthar
abinav vidhya theerthar

சிஷ்யன் : ஞானிகளுக்கு எப்போதும் எல்லா விதமான ஸித்திகளும் இருக்குமா?

ஆச்சார்யாள் : இல்லை. ஒரு ஞானியின் பிராரப்தம் அவ்வாறிருந்தால் அவனிடம் ஸித்திகளை நாம் காணலாம். ஞானி விரும்பினால் எந்த ஸித்தியை வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் அவ்வாறு ஆசை ஏற்படும் என்பது கேள்விக்குரிய விஷயம்.

சி : ஸித்திகள், ஒருவன் அத்யாத்ம வாழ்வில் மேல்நிலை அடைந்ததைக்
குறிக்கின்றனவா?

ஆ : இல்லவேயில்லை. ஸித்திகள், சில மூலிகைகளினாலும், சில துர்தேவம்தைகளின் உபாஸனையாலும் கிடைக்கலாம்.

சி : ஞானியானவன், எித்திகளினால் எந்த விஷயத்திலாவது பாதிக்கப்படுகிறானா?

ஆ : இல்லை. அவனுக்கு ஸித்திகளில் சிறிதளவும் கவனமில்லை. ஸித்திகள் வரப்பெறலாம், அல்லது வராமலிருக்கலாம். ஆனால் அதைப்பற்றி ஒரு ஞானி கவலைப்படுவதேயில்லை ,

சி: இந்திரஜாலத்தின் மூலம் காண்பது எல்லாமே ப்ரமை என்று சொல்ல முடியுமா? அல்லது இவை வேறு சக்தியினால் ஏற்படுகின்றனவா?

ஆ : சாமான்யமாக கைகளாலோ மறைமுகமாகவோ ஏதாவது செய்தால் அது இந்திரஜாலம் ஆகும். சில சமயங்களில் விசேஷமான சக்தியினாலும் இவையெல்லாம் ஏற்படலாம்

சி: சில ஜனங்கள் மஞ்சட்காமாலை போன்ற வியாதிகளை சுலபமாகக் குணப்படுத்துகிறார்கள், உதாரணத்திற்கு ஒரு பாத்திரத்தில் ஜலத்தை வைத்து அதில் ஏதோ செய்தவுடன் நீர் மஞ்சளாகி விடுகிறது. நோயாளியின் கண் சரியாகி வியாதியும் அகலுகிறது. இம்மாதிரி பல அபூர்வ நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கின்றன?

ஆ: வேறு வகையில் நடைபெறலாம் என்றாலும் சாமான்யமாக அவை மந்திரம் மூலமாக நடைபெறுகின்றன. இதுபோல் குணப்படுத்துபவர்கள் பொதுவாகப் பணமொன்றும் வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சேவையாகத்தான் இதைச் செய்துகொண்டு வருகிறார்கள். நான் பார்த்த அளவில், மற்ற ஜனங்களுக்கு இவர்கள் அம்முறையை உபதேசம் செய்தால் அந்த மந்திரங்களின் சக்தி போய்விடுகிறது

சி: அப்படியென்றால் அவர்கள் எப்படி மற்ற மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்?

ஆ : அவர்கள் சாமான்யமாகத் தம் புதல்வர்களுக்கோ, சிஷ்யர்களுக்கோ சொல்லிக் கொடுத்து விட்டு, தாம் அவ்வாறு செய்வதை விட்டு விடுகிறார்கள்

சி: சில சமயங்களில் படத்திலிருந்து விபூதி விழுவதையும், வேறு சில விசேஷமான நிகழ்ச்சிகளையும் நாம் காண்கிறோம். இவை எதனால் ஏற்படுகின்றன என்று ஆசார்யாள் சொல்லுவார்களா?

ஆ : சில சமயங்களில் ஏதாவது க்ஷத்ர தேவதையின் ப்ரபாவத்தினால் இம்மாதிரி ஏற்படலாம். மற்ற சமயங்களில் ஒருவனின் ஸங்கல்பத்தினால் ஏற்படலாம். இதைத் தவிர ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. சில சமயங்களில் இறைவன் தான் இருக்கிறேன் என்று காட்டுவதற்காக இம்மாதிரி ஏதாவதொன்றைச் செய்யலாம்

ஸித்திகள் அத்யாத்ம வாழ்வில் மேல்நிலையைக் குறிக்கிறதா? ஆச்சார்யாள் பதில்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply