ஸ்ரீராமனும், சீதையும் இந்திய நாட்டின் லட்சியங்கள்.

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

ramar sita
ramar sita
ramar sita

ராமனும், சீதையும்தான் இந்திய
நாட்டின் லட்சியங்கள்.

எல்லாக் குழந்தைகளும் முக்கியமாக, எல்லாச் சிறுமிகளும் சீதையை வழிபடுகின்றார்கள். தூயவளும், தன்னையே அர்ப்பணம் செய்தவளும், எல்லாத் துன்பங்களையும் சகித்தவளுமான சீதையைப் போல் வாழ்வதுதான் ஒரு பெண்ணின் மிக உயர்ந்த ஆசை ஆகும்.

மக்களினத்திற்குப் பொறுமை என்னும் லட்சியத்தினா வடிவமாகத் திகழ்கிறாள் சீதை.

செய், செயலால் உன் சக்தியைக் காட்டு’ என்று மேலைநாடு சொல்கிறது. பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு’ என்கிறது இந்தியா. ஒரு மனிதன் எவ்வளவு அதிகம் வைத்துக்கொள்ள முடியும் என்னும் பிரச்சனைக்கு மேலைநாடு தீர்வு கண்டுள்ளது.

அவன் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியும் என்ற பிரச்னைக்கு
இந்தியா தீர்வு கண்டுள்ளது. ராமனுடைய மனைவி காட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டாள். எனவே ராமரை மீண்டும் மணம் செய்துகொள்ளும்படி மக்கள்
கூறினார்கள். ஆனால், ராமர் தமது வாழ்க்கையிலேயே முதன்முறையாக மக்களின் வேண்டுகோளுக்கு எதிராக நின்றார்; ‘அது’ முடியாது, என் வாழ்க்கை சீதைக்கு மட்டும் சொந்தமானது’ என்று கூறி மறுமணத்திற்கு மறுத்துவிட்டார்.

சீதை, பரிசுத்தமான சீதை, ஆரம்பம் முதல் இறுதிவரை துன்பத்திலேயே உழன்ற சீதை!

எவை எல்லாம் நல்லனவோ, எவை எல்லாம் பரிசுத்தமானவையோ, எவை எல்லாம் புனிதமானவையோ அவை அனைத்தும் சீதை என்றே இந்தியாவில்
போற்றப்படுகிறது.

பெண்களிலுள்ள பெண்மை எதுவோ அதுவே சீதை. சீதை ஆரம்பம் முதல் கடைசிவரை பொறுமையுடன், துன்பத்தையே அனுபவித்து, என்றும் விசுவாசமாக, பரிசுத்தமாக விளங்கிய மனைவி. அவ்வளவு துன்பங்களை அனுபவித்தும் ராமன்மீது கடிந்து ஒரு சொல்லும் சொல்லாதவள். தான் பெற்ற துன்பத்திற்கு எதிராகத் துன்பம்
செய்யாதவள் சீதை.
‘சீதையாக விளங்குங்கள்!”

ஸ்ரீராமனும், சீதையும் இந்திய நாட்டின் லட்சியங்கள். முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *