ஸ்ரீ ராமர் ஏன் நால்வராக அவதாரம்?

ஆன்மிக கட்டுரைகள்

ramar 1
ramar 1
ramar 1

ராவணனைக் கொல்ல ஸ்ரீராமர் போதும் தசரதன் ஒரு பிள்ளையை தான் கேட்டான் ஆனால் ஏன் அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர்?

இந்த உலகத்தில் நான்கு வகை தர்மங்கள் உள்ளன அந்த நான்கு வகையான தர்மங்களையும் மக்கள் பின்பற்றி வாழவேண்டும் என்பதை காட்டுவதற்காக நான்கு சகோதரர்களாக தோன்றினார்கள் ராம லக்ஷ்மண பரத சத்ருக்கனன் நால்வரும். ராவணனை வதம் செய்வதற்காக அல்ல. அது என்ன நான்கு வகையான தர்மம்?

1.சாமானிய தர்மம், 2.சேஷ தர்மம், 3.விசேஷ தர்மம், 4.விசேஷ தர தர்மம்

முதலில் வருவது சாமானிய தர்மம்.

அதாவது பிள்ளைகள் பெற்றோர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மனைவியிடம் கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?” `இது போன்ற அனைத்தும் ‘சாமானிய தர்மங்கள்’ எனப்படும்.

இந்தச் சாமானிய தர்மங்களைக் கடைப் பிடித்து வாழ்ந்து காட்டியவர். ஸ்ரீராமர்
சாமானிய தர்மங்களை ஒருவர் ஒழுங்காகச் செய்துகொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வருமாம். அந்த நிலையில், ‘இறைவன் திருவடி ஒன்றே நிரந்தரம்… மற்ற எதுவும் நிலையல்ல’ என்ற எண்ணம் வருமாம். அதனால்தான் குலசேகர சகர ஆழ்வார்,

“இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” என்று கூறினார்.

சேஸ் தர்மம் ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ என்ற நூலின் ஆசிரியர், ”கிருஷ்ணா! தாமரை போன்ற உன் பாதங்களைச் சுற்றி நான் தேன் வண்டு போல வந்து கொண்டிருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தகைய தர்மத்திற்கு ‘சேஷ தர்மம்* என்று பெயர். இந்த சேஷதர்மத்தைப் பின் பற்றி வாழ்ந்து காட்டியவன் லட்சுமணன்.

மூன்றாவது வகையான தர்மத்திற்கு ‘விசேஷ தர்மம்’ என்று பெயர்.

அதாவது, தூரத்தில் இருந்தபடியே எப்போதும் இறைவன் நினைவாகவே
இருப்பது ‘விசேஷ தர்மம்’ ஆகும். சேஷ தர்மத்தைவிட விசேஷ தர்மத்தைப் பின்பற்றுவது கடினம்.

ramar
ramar

இறைவனுக்கு அருகிலேயே இருந்து கொண்டு இறைவன் நினைவாகவே இருப்பது கஷ்டம் அல்ல ஆனால் தூரத்தில் இருந்துகொண்டு இறைவன் நினைவாகவே படி இருக்கும் போது நான்கு வாழ்வது என்பது கடினமான காரியம்.அதைச் செய்து காட்டியவன் பரதன்.

நான்காவது தர்மம் ‘விசேஷ தர தர்மம்’ எனப்படும்.

இறைவளைவிட அவனுடைய அடியார் களுக்குத் தொண்டு செய்வது விசேஷ தர தர்மம் ஆகும். இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் சத்ருக்கனன்.

அதனால்தான் சத்ருக்கனன் பரதனுக்கு விடாமல் தொண்டுகள் செய்தான். இப்படி நான்கு வகையான தர்மங்களையும் கடைப்பிடித்து மக்களுக்குக் காட்டுவதற்காகத் தான் இறைவன் நான்கு பேர் களாக அவதரித்தான்.

ஸ்ரீ ராமர் ஏன் நால்வராக அவதாரம்? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *