கடவுளை வணங்க முக்கிய தேவை..! ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

bharathi theerthar
bharathi theerthar

எது பக்தி எவனுடைய மனது பகவானைப் பற்றி சிந்தனை செய்கிறதோ எவன் பகவான்நாம் ஸ்மரணத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறானோ அவனுக்கு எப்பேர் பட்ட கஷ்டம் வந்தாலும் அவை சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும்.

கிருஷ்ணனின் கட்டளைப்படி தர்மராஜன் எல்லா தர்மங்களையும் அறிந்த பீஷ்மரிடம் எந்த தர்மம் மிகவும் உயர்ந்தது என்று நினைக்கிறீர்கள்என்று கேட்டார். அதற்கு பீஷ்மர் எல்லா தர்மங்களையும் விட ஆராதனைக்கு பக்திதான் அவசியம் ஆடம்பரம் அல்ல மற்றவர்கள் பாராட்டி அதனால் நமக்கு புகழ் வரட்டும் என்பதற்காக அல்ல பக்தி

பகவத் ஆராதனை விஷயத்தில் சூழ்நிலை பற்றியும் மற்றவரின் கருத்தை பற்றியும் பொருட்படுத்த வேண்டியதில்லை நாம் பகவானுக்கு அடிமை. நம் கடமை என்ற பாவனை தான் நாம் பூஜை செய்யும் பொழுது வேறு எந்த விதமான யோசனையும் குறுக்கிடக் கூடாது அப்படி குறுக்கிட்டால் பூஜையினால் பலன் கிடைக்காது.

தயிர் வெண்ணை விற்கும் நேரங்களில் கூட கோவிந்தா தாமோதரா என்று பகவான் நாமத்தை சொல்வார்களாம் கோபியர்கள்.

கடவுளை வணங்க முக்கிய தேவை..! ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply