பிரதி உபகாரம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

bharthi theerthar
bharthi theerthar
bharthi theerthar

ராமாயணத்தில் ராமர் சீதை இருக்கிற லங்காபுரிக்கு போய் சீதா தேவியோடு பேசி ராமர் கொடுத்த மோதிரத்தை கொடுத்தார். ஸ்ரீதேவி கொடுத்த சூடாமணியை கொண்டுவந்து ராமருக்கு கொடுத்த ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

அப்பொழுது ராமர் ஹனுமாருக்கு ஒரு வார்த்தை சொன்னாராம். அனுமான் நீ எனக்கு பெரும் உபகாரம் செய்தாய். நீ இந்த செய்த உபகாரத்தை பிரதியுபகாரம் ஏதேனும் செய்யவேண்டும் என்பதை மட்டும் எதிர்பார்க்காதே.

என்ன இது இவ்வளவு உதவியை பெற்றுக்கொண்டு திரும்ப என்னிடம் ஒன்றும் எதிர்பார்க்காதே என்று சொல்கிறாரே நியாயமா என்று கேள்வி வரலாம். அதுக்கு காரணம் சொன்னார் பகவான்‌. இன்று நீ எனக்கு உபகாரம் செய்தாய். ஏனென்றால் நான் மிகவும் கஷ்டத்தில் இருந்தேன்.

இதற்காக என்றாவது திரும்ப என்னிடம் இருந்து நீ ஒரு உபகாரத்தை எதிர்பார்க்கலாம். உனக்கு ஒரு கஷ்டம் வந்தால் தானே நான் திரும்ப உபகாரம் செய்ய வேண்டும். நீ என்னிடமிருந்து பிரதியுபகாரம் எதிர்பார்க்கிறாய் என்றால் உனக்கு ஒரு கஷ்டம் வரட்டும் என்று எதிர்பார்க்கிறாய் என்று தானே அர்த்தம் ஆகிவிடும் நீ ஏன் அப்படி செய்ய வேண்டும் கஷ்டம் ஏதுமில்லாமல் சுகமாயிரு என்று சொல்கிறார்.

அதனால் நாம் இன்னொருவருக்கு உபகாரம் செய்யும் போது திரும்ப அவனிடமிருந்து என்ன கிடைக்கும் என்ற பாவனை இல்லாமல் பண்ணக்கூடிய உபகாரம் தான் மிகவும் விசேஷமானது அந்த பாவனையோடு தான் நாம் ஒரு உபகாரம் செய்ய வேண்டும்

பிரதி உபகாரம்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply