ஆசையும், கோபமும்… ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

e0ae86e0ae9ae0af88e0aeafe0af81e0aeaee0af8d e0ae95e0af8be0aeaae0aeaee0af81e0aeaee0af8d e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0

Bharathi-thirthar
Bharathi-thirthar
Bharathi-thirthar

மனிதனுக்கு வாழ்க்கையில் ஆசைகள் ஒன்றுக்கு பின் ஒன்று உண்டாகி கொண்டே இருக்கும் ஒவ்வொரு ஆசையையும் நாம் நிறைவேற்றிக் கொண்டே இருப்போம்.

உடனே மற்றொரு ஆசை ஏற்படும் இந்த ஆசைகளைப் பற்றி முன்னோர்கள்
ந ஜாது காமானாமுபயோகேன சாம்யதி!
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ பூய ராவாபி வர்த்ததே!!
என்று சொன்னார்கள் அதாவது ஆசையை நிறைவேற்றினால் அத்துடன் நிற்காது அது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அக்கினியில் நெய் விட்டால் எப்படி எரியுமோ அதுபோல ஆகையால் ஆசைகளை நிறைவேற்றி அதை குறைக்க வேண்டும் என்பது சரி அல்ல அது உண்டாகாமல் செய்து கொள்வதுதான் சரி

அதைப்போல கோபம் மனிதனுக்கு விசேஷமான சத்துரு சின்ன சின்ன விஷயத்திற்கு கோபித்துக்கொண்டு இருப்பார்கள். அதனால் மிகவும் அனர்த்தங்கள் நிகழும் கோபத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. காம குரோதங்களை எப்படி நீக்குவது என்று கேட்டால் அதற்கு வைராக்கியமும் பொறுமையும் இருக்கவேண்டும். விரக்தியினால் காமத்தையும் பொறுமையால் குரோதத்தையும் தடுக்கமுடியும்.

காம குரோதங்களை விட்டவனுக்கு தான் வாழ்க்கையில் உண்மையான சுகம் இருக்கும் அவன்தான் சரியான மனிதன். இந்த நிலைமை அடைவதற்கு எல்லோரும் முயற்சிக்க வேண்டும் .
சக்னோதிஹைவ ய: ஸோதும் ப்ராக் சரீர விமோசணாத்!
காம க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:

ஆசையும், கோபமும்… ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply