உதவியும், கருணையும்.. ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

bharathi theerthar
bharathi theerthar
bharathi theerthar

சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு நல்ல குணத்தை மனதில் உண்டாக்க வேண்டும் பள்ளியில் படிக்கும்போது கூட படிக்கும் குழந்தைகளுக்கு, தன்னாலான உதவியை செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும்

இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டால் ஒருவரை சமாதானம் செய்ய முயற்சி செய்வது மிகவும் அவசியம். தயை இருக்கிறவனுக்கு அது செய்ய முடியும். பெரிய வேலையில் இருப்பவன் தன்னிடம் உதவி கேட்டு யாராவது வந்தால் அவனுக்கு நியாயமான முறையில் உதவி செய்ய வேண்டும்.

இப்படி மனித வாழ்க்கையில் உதவி செய்ய எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்து கொண்டு இருக்கும். அந்த சமயத்தில் உதவி செய்யாமல் இருந்தால் கிடைத்த நல்ல வாய்ப்பை தவறவிட்ட மாதிரி ஆகும். ஆகையால் எல்லோரும் தனக்கு முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்து பகவானின் அருளுக்கு பாத்திரமாகுங்கள்.

உதவியும், கருணையும்.. ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *