செய்கர்மமும்.. இறை சிந்தனையும்..!

ஆன்மிக கட்டுரைகள்

vishnu
vishnu
vishnu

விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்த போதிலும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான்.
எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து
கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு குமணவித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு தன் நண்பன் ஞானசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த ஞானசித்தன் ஸ்ரீ கிருஷ்ணன் மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான்.

சிரித்துக் கொண்ட குமணவித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு ஒப்புக் கொண்ட ஞானசித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் குமணவித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான்.

வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவது போல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான்.

கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான்.

இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஞானசித்தனை மாடுமுட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆகி விட்டான்.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று ஞானசித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான்.

தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் ஞானசித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்துகொள்ள முடியவில்லை.

எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னாடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான்.

ஆம் எந்த ஸ்ரீ கிருஷ்ணனை அவன் பக்தியுடன் அனுதினமும்
வணங்கினானோ அதே பரந்தாமன் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தார். உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு அவரை வணங்க தோணவில்லை, மாறாக பரந்தாமனிடம் சண்டை போட தொடங்கினான்.

தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான். அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுகொண்டிருந்த பரந்தாமன் அவனை தன்னோடு அணைத்து கொண்டார். பரந்தாமனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் ஞானசித்தன்.

இப்பொழுது பரந்தாமன் பேச தொடங்கினார், ஞானசித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக உன் நண்பன் குமணவித்தனோ முன்பிறவியில்
நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெரும்பாலனவைற்றை நானே ஏற்றுகொண்டேன், மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய்.

ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவ பதிவையே அனுபவிக்க தொடங்குகிறான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின்பு தான் அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும்.

உன் நண்பனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும். அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது.

இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் பரந்தாமன்.

நாட்கள் செல்ல செல்ல ஞானசித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் ஞானசித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள்.

அதே சமயத்தில குமணவித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய ஞானசித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க விதிவிலக்குகளும் உண்டு. அதுதான்” இறைபக்தி” நம் இறைபக்தி நம்மை அனைத்து வினைகளிலிருந்தும் நம்மை விலக்கும், பரந்தாமனை நோக்கிய நமது பிரார்த்தனை நம்மை பகவானை நோக்கி மேம்படுத்தும்

செய்கர்மமும்.. இறை சிந்தனையும்..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *