ப்ரியமும், ப்ரியமின்மையும்.. ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

abinav vidhya theerthar
abinav vidhya theerthar

ஒருவனுக்குச் சர்க்கரை மிகவும் படித்த பண்டமாக இருக்கலாம். இன்னொருவனுக்கு அது பிடித்திருந்தாலும் கூட, சர்க்கரை வியாதி வந்துவிட்டால் அதை அவன் தொடவே மாட்டான். “

இவ்வளவு நாட்கள் சர்க்கரை சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்களே, ஏன் இப்பொழுது மட்டும் சர்க்கரை சாப்பிடுவதில்லை ? என்று கேட்டால், “இப்பொழுது எனக்கு வியாதி வந்திருக்கிறது. அதனால் நான் சர்க்கரையை சாப்பிட மாட்டேன் “ என்று அவன் கூறுவான்.

மருந்து என்ற கசப்பான ஒரு பொருளை நாமெல்லாம் “வேண்டாம், வேண்டாம் “ என்று சாதாரண சமயங்களில் ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருப்போம். ஆனால் வியாதி வந்த காலத்தில், “முதலில் மருந்தைக் கொண்டு வாருங்கள் “ என்று நாமே கேட்டு வாங்கி சாப்பிடுவோம்.

அப்போது நாம் முன்பு பிரியம் வைக்காத பொருளிலும் பிரியத்தைக் காட்டுவோம். ஆகவே ஒரே பொருள் எல்லா காலத்திலும் பிரியமாகவோ அப்ரியமாகவோ இருப்பதில்லை.

ப்ரியமும், ப்ரியமின்மையும்.. ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply