இலையில் மேலே காயும் கீழே உணவும் ஏன்?

ஆன்மிக கட்டுரைகள்

e0ae87e0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaee0af87e0aeb2e0af87 e0ae95e0aebee0aeafe0af81e0aeaee0af8d e0ae95e0af80e0aeb4e0af87

food - 1

இலங்கையில் போர் முடிந்த பின் ராமர் சீதை லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் மற்றும் வானரப்படைகள் அனைவரும் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க ராமர் விரும்பினார்.

ஆனால் பதினான்கு ஆண்டுகள் முடிந்த உடனேயே ராமர் அயோத்திக்கு திரும்பி வராவிட்டால் தான் தீயில் விழுந்து மாண்டு விடுவதாக பரதன் ராமரிடம் சொல்லி இருந்தான். இதனை ராமர் நினைத்துப் பார்த்தார்.

பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் நன்கு அறிவார். பதினான்கு வருடங்களுக்கு முன்பு வனவாசத்தை பரதவாஜ முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின் ராமர் கிளம்பினார் அதன் காரணமாக மீண்டும் பரதவாஜ முனிவரிடம் ஆசி பெற்று அயோத்தி திரும்பி செல்ல ராமர் முடிவு செய்தார்.

ramar 5
ramar 5

பரத்வாஜ முனிவர் ராமர் சீதையையும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்து வரவேற்றார். இன்று இரவு இங்கே தங்கி நடக்கும் உணவு உண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை.

ஆனால் அதே நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். ஆகவே அனுமனை அழைத்தார்.

எனக்காக நீ பரதனிடம் சென்று நான் அனைவருடனும் வந்து கொண்டிருப்பதை சொல்லி விட்டுவா என்று கேட்டுக் கொண்டார்.

ramar - 2

ராமரின் உத்தரவை நிறைவேற்ற அங்கிருந்து விரைவாக சென்ற அனுமன் திரும்பி வருவார் என்று பரதவாஜ முனிவர் எண்ணவில்லை.

அதனால் வந்திருக்கும் அனைவருக்கும் சாப்பிட இலை ஏற்பாடு செய்த பரதவாஜ முனிவர் அனுமனுக்கு தனியாக உணவு சாப்பிட இலை ஏற்பாடு செய்யவில்லை.

அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கும் நேரம் சரியாக அனுமன் வந்து விட்டார். ஆனால் அனுமனுக்கு உணவு இல்லை

இதனைக் கண்ட ராமர் தனது இலையின் மேல்பக்கம் அனுமன் சாப்பிடட்டும் என்று சொல்லி தனக்கு எதிர்பக்கம் அனுமனை அமரச் செய்தார். அனுமன் காய் பழங்களைத் தான் விரும்பி உண்பார் என ராமருக்குத் தெரியும்.

ஆகவே பரிமாறுபவர்களிடம் தனது இலையின் மேல்பக்கத்தில் காய் பழங்களை பரிமாரச் சொன்னார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் வைக்கச் சொன்னார்.

இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடித்தார்கள். தான் உடனடியாகப் போகாவிட்டால் பரதனின் உயிர் சென்றுவிடும் என்று தெரிந்தும் பரதனிடம் தான் வந்து கொண்டிருப்பதாக அனுமனை தூது போகச் சொல்லி விட்டு பரதவாஜ முனிவரின் விருந்தில் ராமர் கலந்து கொண்டது.

மேலும் தனது இலையில் மேல் புறம் அனுமனுக்கு பழங்கள் காய்கனிகளை வைக்கச் சொல்லி தான் இலையின் கீழ்புறம் சாப்பாட்டை சாப்பிட்டதாலும் தான் இப்போதும் அதே மாதிரி உணவு உண்பது உலக வழக்கமாக்கியது.

இலையில் மேலே காயும் கீழே உணவும் ஏன்? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply