கொள்ளைக்காரனை கலங்க வைத்த கொம்புத் தேங்காய்!

ஆன்மிக கட்டுரைகள்

e0ae95e0af8ae0aeb3e0af8de0aeb3e0af88e0ae95e0af8de0ae95e0aebee0aeb0e0aea9e0af88 e0ae95e0aeb2e0ae99e0af8de0ae95 e0aeb5e0af88e0aea4e0af8d

guruvayurappan - 1

கிராமவாசி ஒருவர் தனது தோட்டத்தில் பல தென்னங்கன்றுகளை நட்டார். தனது தோட்டத்தில் விளைந்த தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் அறுவடையில் வரும் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் சங்கல்பம் எடுத்து கொண்டார்.

மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவர் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் கோணிப் பையில் சேகரித்து கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் நடை பயணித்தார் .

போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து “கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு” என்று அவரை மிரட்டினான். அந்த கிராமவாசியோ, “இந்த கோணிப் பையில் வெறும் தேங்காய்கள் மட்டுமே உள்ளன. அது உனக்கு உதவாது என்றார்

அவை குருவாயூரப்பனுக்கு எனது காணிக்கையாக எடுத்து செல்கிறேன் இது நைவேத்திய தேங்காய் இதை தர முடியாது’ என்று மேலும் கூறினார்.

கொள்ளைக்காரன் அலட்சியமாக, “குருவாயூரப்பனின் தேங்காய் என்று எங்காவது எழுதி இருக்கிறதா? இல்லை அதற்குக் என்ன பிரத்யேகமாக கொம்புகள் இருக்கிறதா என்ன? என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணி பையைப் பற்றி இழுத்தான்.

Horned coconut - 2

கோணி பையிக்குள் இருந்த தேங்காய்கள் வெளியே சிதறின அதிசயப்படும்படியாக ஒவ்வொரு தேங்காய்க்கும் கொம்பு முளைத்திருந்தது!

கிராமவாசியின் பக்தியும் குருவாயூரப்பனின் இச்செயலையும் கண்ட திருடன் மனம் திருந்தி, குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த கிராமவாசியைப் போக வழிவிட்டான்.

Coconut - 3

கிராமவாசியும் தான் வேண்டிக்கொண்டபடியே தேங்காய்களைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தான். இன்று கூட பக்தர்கள் அந்த கிராமவாசி காணிக்கையாக கொண்டு வந்த கொம்புகள் உள்ள தேங்காய்களை, குருவாயூர்க் கோயிலின் முன் மண்டபத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

குழந்தை குருவாயூரப்பன் நினைத்தால் தேங்காய்களுக்கும் கொம்புகள் முளைக்கும்….. நாம் குருவாயூரப்பனை நினைத்தால் நம் வாழ்வு ஒவ்வொரு நாளும் சிறக்கும்

கொள்ளைக்காரனை கலங்க வைத்த கொம்புத் தேங்காய்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply