குறைந்த நேர பூஜை.. விசேஷ பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

Bharathi theerthar 1 - 8
Bharathi theerthar 1 - 7

நாம் செய்யக்கூடிய நல்ல காரியமோ, பூஜையோ, பிரச்சாரத்திற்காக அல்ல, அவற்றினால் ஈச்வரன் திருப்தியடைய வேண்டும் என்றே நம் அபிப்ராயம் இருக்க வேண்டும்.

அதனால்தான் பீஷ்மர்
! யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா !!
என்று கூறினார்.
பக்தியினால் ஒருவன் பகவானுடைய நாமத்தை ஜபித்தால் அதுவே பெரிய தர்மம் என்று சுட்டிக் காட்டினார்.

பத்து நிமிடமாவது பக்தியுடன் இறைவன் பெயரைச் சொன்னால் அது பெரும் நற்காரியம். சிலர் பூஜையோ, ஸந்தியாவந்தனமோ செய்து கொண்டிருப்பார்கள். அப்பொழுது ஓராயிரம் எண்ணங்கள் அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அந்த பத்து நிமிஷமாவது மற்ற விஷயங்களை மறந்துவிட்டு பகவத் பூஜையிலேயே மனதை நிலைத்திருக்கச் செய்யுங்கள்.. அது உங்களுக்கு பரம சிரேயஸ்ஸிற்குக் காரணமாகும்..

குறைந்த நேரம் பூஜை செய்தாலும் பக்தியோடு செய்தால், அது விசேஷமான பலனைத் தரும்.. ஆகவே, சிரேயஸ்ஸை விரும்பும் அனைவரும் பகவானை பக்தியுடன் பூஜித்து அவனுடைய அருளைப் பெறட்டும். என ஆசிர்வதிக்கிறோம். என்று மகாசன்னிதானம் அருளுரை வழங்கினார்கள்.

குறைந்த நேர பூஜை.. விசேஷ பலன்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *