ஸித்தியளிக்கும் மஹாகாளி: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

mahasanithanam - 8
mahasanithanam - 7

தேவியின் ஸ்வரூபங்களில் மகாகாளி ஒன்றாகும். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் மஹாகாளி என்ற சொல் மஹேஸ்வரி, மஹாகாளி, மஹாக்ரஸா மஹாஸனா என்ற நாமாக்களின் நடுவே வருகிறது. இந்த நாமாவளியில் ம்ருத்யு அல்லது மரணத்தையே கூட அழிக்க வல்லவள் என்று மஹாகாளிக்கு ஒரு விமர்சனம்.

மேலும், சிவபெருமான் மஹாகாலர் என்று அழைக்கப்படுகிறார். ஆகவே பரமேஸ்வரர் என்ற மஹாகாலரின் சக்தியை மகாகாளி என்று அழைக்கிறார்கள்.

குறிப்பாக தாந்த்ரிக நூல்களில், காளி உபாசனை வர்ணிக்கப்படுகிறது. காளியை பூஜிப்பதன் மூலம் அனேக ஸித்திகள் கிடைக்கின்றன.

மஹாகவி காளிதாசர் காளியின் உபாஸகர் என்று நிஜமாக அவருடைய பெயரிலிருந்து ஊகிக்கிறோம்.

க்ஷேத்திரத்திங்கள் என்ற யாத்திரை ஸ்தலங்கள் இந்தியாவில் அனேக இடங்களில் காணப்படுகின்றன. இந்த க்ஷேத்ரங்களில் காளியை உபாஸிப்பது தனி சக்தியை கொடுக்கிறது.

உபாஸகருக்கு பெரும் நிஷ்டையும் அந்தந்த சாஸ்திரங்களில் நம்பிக்கையும் அவசியம். பலனை எதிர்பார்க்காமல் பூஜை செய்வது சிலாக்யம்.

ஸப்தஸதியில் மது, கைடபன் என்ற அரக்கர்களை கொல்வதற்கு பொறுப்பேற்ற சக்தி, காளியே என்று கூறப்படுகிறது. எல்லோரும் மஹாகாளியை பூஜித்து அவளுடைய அருளை அடைவார்களாக.!

ஸித்தியளிக்கும் மஹாகாளி: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *