மகாதேவ ஜயம் !

ஆன்மிக கட்டுரைகள்

shiva linga
shiva linga
shiva linga

– ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

மேலைக் கடலோரத்தில், அதாவது இன்றைய கன்னட தேசத்தில் ( மங்களூர் – உடுப்பி ) சுமார் கி.பி 14அம் நூற்றாண்டில் தீவிர வைஷ்ணவம் தோன்றலாயிற்று. த்வைத சித்தார்ந்த சிற்பியான ஸ்ரீ மத்வர், மத்வ சம்பிரதாயத்தைத் தோற்றுவித்தார். அதில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவே முழுமுதற் கடவுள், வேறு தெய்வம் எதுவுமில்லை.

ஸ்ரீ மத்வரின் சிஷ்ய பரம்பரையினரின் எழிய சீல வாழ்க்கையும் , சாஸ்திர ஞானமும் சாதாரன மக்களை வெகுவாக வசீகரித்தன. ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தத்தை ஏற்றிருந்த பல குடும்பங்களும் ஸ்ரீ மத்வரின் சம்பிரதாயத்திற்கு மாறின.

காலம் உருண்டோடியது. அத்வைதம் அப்பிரதேசத்திலிருந்து அறவே மறைந்திருந்தது. ஆனால் அத்வைத – தத்வ ரீதியில் சிவ-விஷ்ணு பேதமின்றி பக்தி செலுத்தி வந்த குடும்பங்கள் அந்நிலையிலும் மாறவில்லை – மாற முடியவுமில்லை. இன்றும் அங்கு சிவ-விஷ்ணு பேதம் பெயரளவிற்குத்தான் இருக்கிறதேயொழிய உள்மனதில் ஏதும் களங்கமின்றியே மக்கள் பக்தி செலுத்துகிறார்கள்.

மத்வ சம்பிரதாயத்தையொட்டி ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆராதனையை பக்தி சிரத்தையோடு செய்து வருபவர்கள், கூடவே சிவ ஆராதனையும் செய்கிறார்கள். இரத்தத்தில் ஊறிப்போன இப்பழக்கத்தின் காரணமாக அங்குள்ள பெரியோர்கள் பலர் சிவனை மனதின் அடித் தளத்தில் நிலைந்திருக்கச் செய்து, எந்தக் காரியம் செய்ய முற்பட்டாலும், எத்தகைய ஆபத்து நேரிட்டாலும், எவ்வித மனச்சோர்வு ஏற்பட்டாலும், ” மகாதேவ விஜயம் ” என்று உரக்கக் கூவி, சர்வமங்களத்தை மட்டும் அளிக்கும் எமையாளும் ஜெகதீசனைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

mahadevar - 1

அந்த மகாதேவன் வந்துவிட்டால் அங்கு ஜயம் ஒன்றுதான் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் இருப்பதாலேயே ‘ மகாதேவ விஜயம், மகாதேவ ஜய ‘ மாக மாறிவிட்டது !. ‘ ஓம் நமசிவாய ‘ என்று தமிழகத்திலும், ‘ ஹர ஹர ஹர மகாதேவா ‘ என்று வடநாட்டிலும் பக்தர்கள் கோஷமிடும் ஈசுவரன் அங்கே வைஷ்ணவர்களிடையே ‘ மகாதேவ ஜய ‘ மாகக் களி நடனம் புரிகிறான்.

” அஞ்செழுத்திலே பிறந்து அஞ்சே ழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள் !
அஞ்செழுத்தி லோரெழுத்தை அறிந்துகூற வல்லீரேல்
அஞ்ச லஞ்ச லென்று நாதன் அம்பலத்தி லாடுமே ! “

(சைவம் ஆதிசங்கரர் அருளிய ஷண்மத ஸ்தாபனம் – சாஸ்தா பதிப்பக நூலில் இருந்து…)

மகாதேவ ஜயம் ! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply