அனுமார் அவதாரம் ஏன்? அரன் அளித்த ஆன்சர்!

ஆன்மிக கட்டுரைகள்

hanuman 2
hanuman 2
hanuman 2

ஒரு நாள் சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது இராம நாமத்தை
உச்சரித்து கொண்டே வந்தார்.

பார்வதி தேவி, எம்பெருமானை
பார்த்து கேட்டாள், “ சுவாமி, நீங்கள் எப்பொழுதும் ‘ராம’ நாமம் சொல்வதன் விளக்கம் கூறுங்கள் என்றார்

தேவி, ‘ராம’ என்ற எழுத்து இரண்டு
விஷயங்களை குறிக்கிறது. ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம். இரண்டாவது, அது விஷ்ணுவின் ஒரு அவதாரத்தை குறிக்கிறது. இராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம்.

நான் பூலோகத்தில் அவதரித்து ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“ இதை கேட்ட சக்திக்கு கோபம் வந்து, தான் மகேஷ்வரனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள்.

சிவன் கூறினார்.
” தேவி, கவலை வேண்டாம்.
நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார். பார்வதியும் சமாதானமாகி
சுவாமியுடன் அவர் எடுக்கப் போகும் அவதாரத்தை பற்றி
விவாதிக்க தயாரானாள்.

பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம் ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது
ஏன், குரங்கு அவதாரம்*?
பரமேஸ்வரன் விளக்குகிறார்.

மனிதனாக அவதாரம் எடுத்தால்,
அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும்.. எஜமானனை விட சேவகன் ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும்.
இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது.

குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்

பார்வதி கடைசியாக இன்னொரு சந்தேகத்தை கிளப்பினாள்.
சுவாமி, ராவணன் உங்கள் பரம பக்தன் நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு உதவ முடியும்? ”, என்று கேட்டாள்

சிவன், ” தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? இராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி பண்ணுவதற்காக
தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.

இராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள்.
ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்.

விஷ்ணு அம்சமான ராமரும்,
சிவ அம்சமான அனுமானும்- நம்மை எல்லோரையும் காப்பாற்ற,
வேண்டி வணங்கி எல்லாம் அருளையும் பெறுவோம்.

அனுமார் அவதாரம் ஏன்? அரன் அளித்த ஆன்சர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *