வெட்டுப்பட்ட விரல்..‌! வழிகாட்டிய ஆச்சார்யாள்.. பூரணமான அருள்!

ஆன்மிக கட்டுரைகள்

abinavavidhyadhirthar-3
abinavavidhyadhirthar-3
abinavavidhyadhirthar-3

பக்தர் ஒருவரின் அனுபவம்

ஒருமுறை, என் மூத்த மகன் தற்செயலாக அவரது ஒரு விரலை வெட்டினார். அவருக்கு நீரிழிவு நோய் உள்ளதால், அதை வெட்டுவதா அல்லது வேறு ஏதாவது செய்வதா என்ற முடிவுக்கு டாக்டர்களால் வர முடியவில்லை.

ஆச்சார்யாள் ஆசிர்வாதம் கேட்டு ஒரு கடிதம் எழுதினேன். தினமும் 40 நாட்கள் ஒரு கோவிலில் சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்ய ஆசார்யாள் அறிவுறுத்தினார்.

அருகில் சிவன் கோவில் இல்லை. மேலும், மற்ற தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் அவருடைய அறிவுரைகளை பின்பற்றுவது எனக்கு கடினமாக இருந்தது. எனவே, இந்த நாற்பது நாள் அபிஷேகத்தின் செலவுக்கு தேவையான தொகையை அனுப்பினால், சிருங்கேரியில் உள்ள சிவா கோவிலில் அபிஷேகத்தை ஏற்பாடு செய்ய முடியுமா என்று அவருடைய ஆலோசனையை கேட்டு ஆச்சார்யாலுக்கு இன்னொரு கடிதம் எழுதினேன்.

இரக்கத்தால், ஆச்சார்யாள் அதை சிருங்கேரியில் ஏற்பாடு செய்தார். இதைத் தவிர, ஆச்சார்யாலின் அறிவுறுத்தலின்படி, பிரசாதமும் தினமும் தவறாமல் எனக்கு அனுப்பப்பட்டது. குறிப்பிடத் தேவையில்லை, எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லாமல் மகனின் விரல் இயல்பு நிலைக்கு வந்தது.

வெட்டுப்பட்ட விரல்..‌! வழிகாட்டிய ஆச்சார்யாள்.. பூரணமான அருள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *