ஆணவமும் சோம்பலும் அழிவைத் தரும்!

ஆன்மிக கட்டுரைகள்

fish
fish
fish

ஒரு ஊரில் வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தது அதில் சிறிதும், பெரியதுமாக நிறைய மீன்கள் இருந்தன.

அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தது. அவைகள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக அக்குளத்தில் வாழ்ந்தன.

மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ தன்மை, குணம் இருந்தது. ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை.

முதலாவது மீனின் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன் எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.

இரண்டாவது மீனின் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயம் தோன்றி பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.

மூன்றாவது மீனின் இயல்பு – காலதாமதம் செய்து யாருடைய நல்ல உபதேசங்களை கேட்காமல் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் குணமுடையது

ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் அக்குளத்தருகே வந்து அதைச் சுற்றிலும் வாய்க்கால் அமைத்து தண்ணீரை வடியவைத்து , நீர் குறைந்ததும் வலை வீசி மீன்களைப் பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டனர்.

இந்தப்பேச்சை அம்மூன்று மீன்களும் செவிமடுத்தது. மறுநாளே கால்வாயும் வெட்டத் துவங்கினர். பெரிய மீன்கள் மற்ற மீன்களைக் கூப்பிட்டுப் பேசத் துவங்கியது.

அப்போது முதலாவது மீன் பேச துவங்கியது. “உறவினர்களே இக்குளத்தில் இருக்கும் நம் யாவருக்கும் ஆபத்து நெருங்கி விட்டது. இன்று சில மீனவர்களின் பேச்சைக் கேட்டேன். நான் ஒரு யோசனை சொல்கிறேன் நீர் வடிய இவர்கள் வெட்டும் வாய்க்கால் மூலம் தந்திரமாக தப்பித்து வெளியேறி வேறொரு இடத்திற்கு செல்வோம் என்றது.

இந்த யோசனையில் யாருக்காவது ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் மேலும் அடுத்த இடத்திற்குப் போய்விட்டால் இந்த பெரும் ஆபத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் தண்ணீரும் வெளியேறத் துவங்கிவிட்டதால் சீக்கிரம் முடிவெடுப்போம் என்றும் கூறியது.

இரண்டாவது மீன் தனது நண்பர்களிடம் நண்பனே இப்படி முடிவெடுக்க இன்னும் காலம் வரவில்லை. நேரம் வரும்போது எனக்கு தக்க யோசனை தோன்றும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். என்றது.

மூன்றாவது மீன் தனது நண்பர்களிடம் இப்போதைக்கு இந்த பேச்சு அவசியமும் இல்லை , அவசரமுமில்லை இதெல்லாம் வீண் பயம் கவலைகொள்ள வேண்டாம் என்றது. அதற்கான காலம் இதுவல்ல, இப்போது உள்ள நேரத்தை வீணடிக்காமல் ஆனந்தத்துடன் துள்ளி விளையாடுவோம்.

பழக்கமான இடத்தைவிட்டுப் போக மனமில்லாததால் மற்ற மீன்களும் இதை ஆமோதித்தது. அதனால் முதலாவது மீன் நான் போகிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் நீரினுட் புகுந்து வெளியேறிவிட்டது.

மீனவர்கள் அதிக அளவு நீரை வெளியேற்றிவிட்டு நல்லதொரு அழுத்தமான வலையை குளத்தில் வீசி, பலவித யுக்திகளைக் கையாண்டு மீன்களையெல்லாம் வலையில் சிக்க வைத்தனர். இரண்டாவது மீனும் அதில் சிக்கியது. ஆனால் வலையின் கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு வலையினுள் கட்டுண்டதைப் போல கிடந்தது.

மீனவர்கள் ,வலையை வேறு நல்ல நீர்ருள்ள இடத்திற்கு எடுத்துப்போய் சுத்தம் செய்வோம் என்று இழுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்யத் துவக்கினர், இரண்டாவது மீன் கயிற்றை வாயிலிருந்து விடுத்துக் கொண்டு நீரில் தாவி தப்பித்து கொண்டது.

ஆனால் மூன்றாவது மீன் பயத்திலேயே உணர்விழந்து மரணத்தைத் தழுவியது.

அதனால் ஆபத்து/இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான் என பாகவதம் கூறுகிறது

ஒருவன் தனக்குத் தக்க சமயத்தில் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ அவன் கஷ்டப்பட்டுதான் சுகமடைய முடியும்.

எந்த மனிதனும் ஆலோசனை செய்து, நன்கறிந்து, தேசகாலத்தை உத்தேசித்து, பரந்தாமனின் உபதேசங்களை சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்தினால் அதன் ஒத்துழைப்பால் விருப்பமான பலனைப்பெற முடியும், ஒவ்வொரு நிமிடமும் பரந்தாமனின் புகழ் பாடுவோம்

ஆணவமும் சோம்பலும் அழிவைத் தரும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *