பக்தரை தண்டித்த பாட்ஷா..! சவுக்கடி கொடுத்த ஜெகன்னாதர்!

ஆன்மிக கட்டுரைகள்

e0aeaae0ae95e0af8de0aea4e0aeb0e0af88 e0aea4e0aea3e0af8de0ae9fe0aebfe0aea4e0af8de0aea4 e0aeaae0aebee0ae9fe0af8de0aeb7e0aebe e0ae9a

puri jagannath
puri jagannath
puri jagannath

தில்லியில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்துவந்தார். அவர் அவலட்சணமான, மற்றும் கூன்முதுகர் . ஆயினும் அவர் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தாக திகழ்ந்தார்.

தையற் தொழிலில் கைதேர்ந்த பரமேஸ்டி, டில்லி முகல் பாட்ஷாவிற்கு துணி தைத்து தருமளவிற்கு அவர் கீர்த்தி பெற்றவராக இருந்தார்.

ஒரு சமயம் பாட்ஷா தங்க ஜரிகையும், முத்து மற்றும் வைரமும் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த துணியொன்றை, இரண்டு தலையணைகளை தைப்பதற்காக பரமேஸ்டிக்கு அனுப்பிவைத்தார்.

அழகான துணியைப் பார்த்ததும் இது பிரபு ஜெகந்நாதரின் தலையணைக்கு மட்டுமே பொருத்தமானது. என்று பரமேஸ்டி மனதிற்குள் எண்ணினார்.

பரமேஸ்டி, பாஷாவிடமிருந்து துணியைப் பெற்றுக் கொண்ட சமயம் ரத யாத்ரை காலமாகும். ஜெகந்நாதர் ரதத்திலேறி பஹண்டி விஜயம் செய்யும் சமயம். பரமேஸ்டி தலையணைகளைத் தைக்கத் தொடங்கினார்.

தைத்து முடித்த பிறகு நேர்தியாகவும் அழகாகவும் வடிவமைக்க பட்டிருந்த தலையணைகளை கண்டு, திருப்தியடன் கண்ணை மூடிக் கொண்ட பரமேஸ்டி, பிரபு ஜெகந்நாதரின் பஹண்டி விஜய லீலையை மனதில் நினைத்து பார்த்தார். ஜாதி மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்களின் நடுவே பகவான் ஜெகந்நாதர் எல்லோரது மனதையும் வசீகரித்தபடி வந்து கொண்டிருந்தார்

ஜெகந்நாதரை கோயிலிலிருந்து எடுத்துச் சென்றபோது அவர் தலையணையில் சாய்ந்திருந்தார். சேவகர்கள் தலையணையை நகர்த்தி, நகர்த்தி, ஜெகந்நாதரை ரதத்தில் ஏற்றுவார்கள். இந்தக் காட்சியனைத்தையும் பரமேஸ்டி தியானத்தில் பார்த்தார்.

திடீரென தலையணை பொத்துக்கொள்வதைப் பார்த்து, பகவானுக்கு இன்னொரு தலையணை தேவை என்பது அவருக்கு தெரிந்தது. ஏதோ நிஜமாகவே பிரபு ஜெகந்நாதர் பக்கத்தில் நின்று கொண்டிருப்பது போல, அவர் பாட்ஷாவிற்காக தைத்து வைக்கப்பட்ட இரண்டு தலையணையில் ஒன்றை, எடுத்துக் கொடுத்தார்.

மானசீகமாக கொடுத்ததை ஜெகந்நாதர் நிஜமாகவே வாங்கிக்கொண்டார். சேவகர்களும் அவரை ரதத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே போனார்கள்.

பரமேஸ்டியின் கற்பனை கலைந்தது. தன்வசம் இரண்டு தலையணைகளுக்குப் பதிலாக ஒன்று மட்டுமே இருப்பதை கண்டார் ! ஒரு தலையணையை ஜெகந்நாதர் நிஜமாகவே எடுத்துக் கொண்டது அவருக்கு திடீரென உரைத்தது.

பரமேஸ்டிக்கு இதைக் காண ஆச்சர்யம். தான் தைத்த ஒரு தலையணை பகவானுடைய ஏகாந்த சேவைக்கு உபயோகப்படுத்தியதை நினைத்து தையற்காரர் தன்னை பாக்ய சாலியாக எண்ணிக்கொண்டார். ஜெகந்நாதர் தன்னிடம் கருணை காட்டுவதாக அவர் நெஞ்சுருகினார்.

அதே சமயம் பயமும் அவரை தொற்றி கொண்டது . ஒற்றை தலையணையை மட்டும் கொண்டு போய் கொடுத்தால், பாட்ஷா தண்டிப்பார் என்பதில் சந்தேக மில்லை என்று, பரமேஸ்டி தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கையில், பாட்ஷாவின் தூதர் இரண்டு தலையணைகளையும் அரண்மனைக்கு கொண்டு வரும்படியான, பாட்ஷாவின் உத்தரவை தெரிவித்தார்.

பரமேஸ்டி உடனே ஒரேயொரு தலையணையை மட்டும் தன்னுடன் எடுத்துச் சென்றார். தன் வணக்கங்களை பாட்ஷாவுக்குத் தெரிவித்து விட்டு, பிறகு அவரிடம் தலையணையை கொடுத்தார்.

பாட்ஷா குழம்பிப்போய் கேட்டார்: “நான் இரண்டு திண்டுகளைச் தைக்கச் சொன்னேன். ஒன்று இங்கே.. இன்னொரு திண்டு எங்கே? நீ இன்னொரு திண்டு தைக்கவில்லையா? இன்னொரு திண்டு என்னவாயிற்று? என்னிடம் உண்மையைச் சொல்லவும் என்று கேட்டார்.

பரமேஸ்டி, உடனே பாட்ஷாவின் காலில் விழுந்து, மற்றொரு திண்டை பகவான் ஜெகந்நாதர் எடுத்துக் கொண்டதால். “என்னிடம் இந்த ஒரு திண்டு மட்டுமே இருக்கிறது. தயவுசெய்து இதை ஏற்றுக் கொண்டு, என்னை என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படியே செய்து கொள்ளுங்கள்.” என்று கூறினார்.

பாட்ஷா புன்னகைத்தார், ஆனாலும் உள்ளம் கொதித்தார். பரமேஸ்டியை முறைத்துப் பார்த்துவிட்டு, ‘நீ என்ன சுயநினைவில் இல்லையா ? உன்னிடமிருந்து எப்படி அவரால் திண்டை எடுத்துக் கொள்ள முடியும்?

ஶ்ரீ க்ஷேத்திர புரி இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. எப்படி அவரால் ஒரே நாளில் இவ்வளவு தூரம் வந்து உன்னிடமிருந்து திண்டை எடுத்துச் செல்லமுடிந்தது? என்று பாட்ஷா கேட்டார்.

பாட்ஷாவின் அறியாமைக்கு பதில் கூற நினைத்த பரமேஷ்டி, பகவானின் புனித நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.

பின்பு பாட்ஷாவிடம், தான் மரணத்திற்கு பயப்படவில்லை என்றும், . பகவானுக்கும் பக்தனுக்குமிடையே எத்தனை தூரம் இருந்தாலும் அது அவருக்கு ஒரு பொருட்டேயில்லை. பக்தனின் மனோ பாவத்திற்கு ஏற்ப, அவர் தனக்கு அளிப்பதை மிக பிரியமுடன் ஏற்றுக் கொள்கிறார்.”

பரமேஸ்டியின் இந்த விளக்கத்தைக் கேட்டு மிகவும் கோபங் கொண்ட பாட்ஷா, ” . உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக் கொள்.உனக்கு மரணதண்டனைக்கு ஆணையிடுகிறேன் என்றார். பின்னர் சேவகர்களை அழைத்து, இவனை கைது செய்யுங்கள் !

இந்தக் கூன்முதுகனை சிறைச்சாலைக்கு அழைத்துப்போய், கை கால்களை கட்டி, பட்டினி போடுங்கள் .அவன் பட்டினியால் சாகட்டும். அவன் கடவுள் அவனை எப்படி காப்பாற்றுகிறாரென்று !” நானும் பார்கிறேன் என்றார்.

பரமேஸ்டி சிறையில் பகவான் ஜெகந்நாதரிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார். “ஓ பிரபு , தயவு செய்து என்னை ரட்சிக்கவும் ! இந்த மொகலாய அரசரின் தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்றவும். நீங்கள் என்னை எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஏனென்றால் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை.”

இப்படியே பிரார்த்தித பரமேஸ்டி பகவானின் நாமத்தை கண் மூடி உச்சரித்தார் தியானத்தில் ஆழ்ந்தார். அவரது மனம் பகவானின் நான்கு கை ரூபத்தில் லயித்திருந்தது. பரமாத்மாவான பகவான் ஜெகந்நாதருக்கு பரமேஸ்டியின் நிலை தெரிந்தது.

பகவானால், அவரது பக்தர்கள் படும் அவஸ்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர் உடனடியாக சிறைக்கூடத்தில் தோன்றி, பகவான் பட்டொளி வீசினார்.தன் கருணைப் பார்வையை பரமேஸ்டியின் மீது செலுத்தினார்.

பகவானுடைய பார்வை அவர் மீது விழுந்த மாத்திரத்தில் பரமேஸ்டியின் கைகால்கள், விலங்குகளில் இருந்து விடுபட்டன . அவர் கண்ணைத் திறந்ததும், தன் முன் பகவான் ஜெகந்நாதர் இருப்பதைப் பார்த்தார்.

பகவான் தனது தாமரைத் திருவடிகளை பரமேஸ்டியின் தலையில் வைத்தார். உடனடியாக பரமேஸ்டியின் கூன் முதுகு நிமிர்ந்து, அழகான உருவம் பெற்றார் . பகவானின் தாமரைத் திருவடியை தலையில் ஏந்திய பரமேஸ்டி, பக்தி பரவசமடைந்தார்.

பிறகு பகவான் ஜெகந்நாதர் , அரண்மனையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த, முகல் பாட்ஷாவின் கனவில் தோன்றி, .”முட்டாள் அரசனே ! . ஒரு எளிய வஸ்துவான திண்டை எனக்குகளித்தமைக்காக நீ என் பக்தனை தண்டித்துவிட்டாயா?. இந்த ஜகத்தில் உள்ளவை எல்லாம் எனக்குரியவை.

அவர் எனக்கு உரியதையே திருப்பிக் கொடுத்தார் . உடனடியாக அவரை விடுதலை செய்யும்படி உனக்கு ஆணையிடுகிறேன். அவர் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டி யாசிக்கவும், என்று கூறி , பாட்ஷாவிற்கு கசையடி கொடுத்து அரண்மனையிலிருந்து வெளியேறினார்.

கத்திகதறி படுக்கையிலிருந்து எழுந்த பாட்ஷா, தான் ஏதோ கெட்ட கனவு கண்டோமோ என்று எண்ணினார். ஆனாலும் தன் முதுகில் செந்தழும்புகள் இருப்பதை பார்த்து , தான் கண்டது சாதாரண கனவல்ல என்று அவருக்கு புரிந்தது.

தனது பக்தனின் பொருட்டு, எனக்கு பாடம் புகட்ட, எனது கனவில் வந்து தண்டனை அளித்திருகிறார், பகவான் ஜெகந்நாதர். அவருடைய ஆணைகளை நிறைவேற்ற நான் தாமதித்ததால், நான் இன்னும் பெரிய ஆபத்திற்கு உள்ளாவேன் .” என்றெண்ணி பரமேஸ்டியை விடுவிக்க சிறைச்சாலைக்கு, பாட்ஷா விரைந்தார்

சிறைச்சாலையில் பரமேஷ்டியின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டும், அவரது முதுகு கூன் நிமிர்ந்தும், அழகு மிளிர பிரகாசத்துடன் இருந்த பரமேஸ்டியை கண்டு வியந்தார். அவர் எந்த வித பாதிப்பு இல்லாதவராய் ஹரி நாமத்தை உச்சரித்து கொண்டிருந்தை கண்டார்.

பரமேஸ்டியிடம் மன்னிப்பு வேண்டிய பாட்ஷா , அவரை தக்க மரியாதையுடனும், வெகுமதிகளை அளித்தும், பட்டத்து யானை மேல் அமர்தி ராஜ மரியாதையுன் அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

பக்தரை தண்டித்த பாட்ஷா..! சவுக்கடி கொடுத்த ஜெகன்னாதர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply