ஆனந்தம் தரும் இடம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

e0ae86e0aea9e0aea8e0af8de0aea4e0aeaee0af8d e0aea4e0aeb0e0af81e0aeaee0af8d e0ae87e0ae9fe0aeaee0af8d e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebe

Bharathi theerthar
Bharathi theerthar
Bharathi theerthar

பக்தி எவனுக்கு இருக்கிறதோ அவனுக்குத்தான் பகவான் சன்னிதியிலே உட்கார்ந்தால் ஆனந்தம் உண்டாகிறது. அந்த ஆனந்தத்தை அவன் வேறு எங்கேயும் அடைய முடியாது.

எவ்வளவு பணம் கிடைத்தாலும் அந்த ஆனந்தம் வராது. எவ்வளவு பக்ஷணங்களைச் சாப்பிட்டாலும் அந்த ஆனந்தம் வராது. எவ்வளவு மாலைகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டாலும் அந்த ஆனந்தம் வராது.

பகவானுடைய சன்னிதியில் உட்கார்ந்து அந்த பகவானுடைய மூர்த்தியை தியானம் செய்தால்தான் அந்த ஆனந்தம் வரும். அதனால் பகவத்பாதர், “இந்த பக்தி என்கிற பசுவினால் எனக்கு அமிதமான ஆனந்தம் என்கிற அமுதம் கிடைக்கிறது. அதனால் இந்த பக்தி எனக்கு ஸ்திரமாக இருக்க வேண்டும். அதற்கு பகவானே நீ அனுக்ரஹம் செய்” என்று பிரார்த்தித்தார்.

அப்பேற்பட்ட பக்தி இருந்தால் வேறு எந்த யோக்யதையையும் பகவான் பார்க்க மாட்டார். நீ படித்தவனா, நீ மிக வயதானவரா, நீ பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறாயா என்று எதையுமே பகவான் பார்க்க மாட்டான். அவன் பார்க்கக்கூடியது பக்தி ஒன்றுதான். பக்தி என்று சொன்னால், பகவான் விஷயத்திலே மனதை நிறுத்துவதுதானே பக்தி.

ஆனந்தம் தரும் இடம்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply