சொர்க்கத்தை மிஞ்சிய இடம்!

ஆன்மிக கட்டுரைகள்

e0ae9ae0af8ae0aeb0e0af8de0ae95e0af8de0ae95e0aea4e0af8de0aea4e0af88 e0aeaee0aebfe0ae9ee0af8de0ae9ae0aebfe0aeaf e0ae87e0ae9fe0aeaee0af8d

vishnu
vishnu
vishnu

எப்பொழுதும் சதா ஸ்ரீ விஷ்ணு நாமமே கூறும் குரு… ஒரு முறை ‘தன் சீடர்கள் யாரிடமும்‌ ஒன்றும்‌ கூறாமல்‌ எங்கோ செல்வார்‌. சில ‌ நாள்கள்‌ கழிந்தே குடில் திரும்புவார்‌.

இது அடிக்கடி தொடர்ந்து நடக்கும் சம்பவம்.. இதில் சீடர்களுக்குள் சந்தேகம்‌. “அவர்‌ என்ன அடிக்கடி சொர்க்கத்திற்கா போய்‌ வருகிறார் என‌ ஒரே விவாதம் சீடர்களுக்குள் ”

ஒரு சீடன் மட்டும் அவரை ‌ ஒரு நாள் ‌ரகசியமாகப்‌ பின்தொடர்ந்தான்‌.

அப்போது, விவசாயியைப்‌ போல வேடமணிந்த குரு, ஒரு காட்டினுள்‌ இருக்கும்‌ குடிலினுள்‌ சென்றார்‌. அங்கிருந்த ஒரு முதியவரை குளிப்பாட்டிப்‌ பராமரித்து , அளாவளாவி, உணவும்‌ சமைத்து வைத்து விட்டு இரண்டு நாட்கள் கழித்துத்‌ திரும்பினார்‌.

குருவுக்கும் முதியவருக்கும் எந்த உறவும் கிடையாது, அன்புடன் அவரை பராமரித்து வந்தார்

இதை கண்டு திரும்பிவந்த சீடன், ‌ பிறர் சீடர்கள்‌ கேட்டபோது, அவர்‌ சொர்க்கத்தைவிடப்‌ பெரிய இடத்திற்குச்‌ சென்று வந்தார்‌ என்றான்‌.

செத்த பிறகு சொர்க்கத்திற்குப்‌ போக மரணத்திற்குப்‌ பின்‌ கிடைக்கும்‌ பரிசாக அதை ஏன்‌ நாம் நினைக்க வேண்டும்‌? அதில்‌ சுயநலம்‌ இருக்கிறது.

அங்குச்‌ செல்லவேண்டும்‌ என்பதற்காகச்‌ செய்கின்ற செயல்களை, இங்கே செய்தால்‌ பூமியைச்‌ சொர்க்கமாக்கலாம்‌.

செத்தபின்‌ ஒருவர் எங்குச்‌ செல்வார்‌ என்பதைவிட , வாழ்ந்தபோது பிற
உயிர்களுக்கு என்ன செய்தார்‌ என்பதே முக்கியம்‌.

கீதையின் வழியில் பிரதிபலன் பாராது கர்மம் செய்வோம். பலன்களின் நன்மையோ தீமையோ பரந்தாமன் திருவடி பாதம் சேர்ப்போம்

சொர்க்கத்தை மிஞ்சிய இடம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply