ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

Bharathi theerthar
Bharathi theerthar
Bharathi theerthar

சங்கரபகவத்பாதாள் நமக்கு உபதேசங்கள் செய்யும்போது,
வேதோ நித்யமதீயதாம் ததுதிதம் கர்ம ஸ்வனுஷ்டீயதாம் I
“ஒருவன் தன்னுடைய வேதசாகையை தினந்தோறும் அத்யயனம் செய்ய வேண்டும். அதில் சொல்லப்பட்ட கர்மாக்களை நன்கு அனுஷ்டிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

“ஸ்வனுஷ்டீயதாம்” என்பதில் ‘ஸு’ என்ற உபஸர்கம் ஏன் போடப்பட்டது? ஸ்ரத்தையும் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகத்தான், இவ்வாறு ஸ்ரத்தைக்கு பிராதான்யம் (முக்கியத்துவம்) சாஸ்திரத்தில் ஒவ்வோர் இடத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாம் செய்யக்கூடிய காரியங்கள் சாஸ்திரத்தில் கூறப்பட்ட மாதிரி இல்லாமல் இடம், காலம் முதலியவற்றின் வேற்றுமையால் கொஞ்சம் குறைபாடுகள் வந்திருக்கலாம். ஆனால், ஸ்ரத்தை இருந்தால் நம்முடைய காரியங்களுக்குப் பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *