மூங்கிலாய் ஊன்றி உயர வேண்டும்… பக்தியில்!

ஆன்மிக கட்டுரைகள்

e0aeaee0af82e0ae99e0af8de0ae95e0aebfe0aeb2e0aebee0aeafe0af8d e0ae8ae0aea9e0af8de0aeb1e0aebf e0ae89e0aeafe0aeb0 e0aeb5e0af87e0aea3

murugar shasti
murugar shasti
murugar shasti

இறைவன் மீது தோன்றும் பக்திக்கும் பொறுமைக்கும் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள்.

மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு சிறு அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.

ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி ? சட சடவெனும் அசுர வளர்ச்சி.

ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை!

அதே போல் நாம் பகவான் மீது வைக்கும் பக்தியும் மிகவும் ஆழமாக வேறுன்ற வேண்டும். பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது.

இறைவா… நாங்கள் அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், பக்தி எனும் அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை எனும் குணம் வேண்டும்.

மூச்சு உள்ளவரை கடவுளின் மீது பக்தி பெற முயற்சி செய்வோம். முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை.

மூங்கிலாய் ஊன்றி உயர வேண்டும்… பக்தியில்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply