வாழ்வின் குறிக்கோள்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

Bharathi theerthar
Bharathi theerthar
Bharathi theerthar

ஆசைகள் கஷ்டத்தை பலனாகக் கொடுக்கின்றன என்று ஒருவன் அறிந்து விட்டானேயானால், பகுத்தறிந்து பார்ப்பது ஒன்றுதான் ஒருவன் திருந்த ஒரே வழியாகும்.

ஆகவே, ஒருவன் தரித்ரனாகிவிடக் கூடாது என்று விரும்பினால், அவன் விஷயங்களுக்கு ஆசைப்படக் கூடாது. தான் எதைப் பெறுகிறானோ அதிலேயே திருப்தியடைய வேண்டும்.

பகவத்பாதாள், விதிவசாத் ப்ராப்தேன ஸந்துஷ்யதாம் (விதிவசத்தால் என்ன கிடைக்கப் பெறுகிறாமோ அதிலேயே திருப்தியடை) என்று கூறியிருக்கிறார். நமக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தே தீரும்.

விதியின் வலிமை அத்தகையது. நாம் ஆளரவமற்ற கானகத்தில் இருந்தாலும் அவ்வாறே நடக்கும்.

த்வீபாதன்யஸ்மாதபி மத்யாதபி ஜலநிதேர்திசோப்யந்தாத் I
ஆனீய ஜடிதி கடயதி விதிரபிமதமபிமுமகீபூத: II

“இரு பொருட்கள் ஒன்று சேர வேண்டும் என்று இருந்தால், அவை வெவ்வேறு தீவுகளிலிருந்தாலும் கடலின் வயிற்றில் இருந்தாலும் நெடுந் தொலைவிலிருந்தாலும் விதியானது அவற்றை ஒன்று சேர்க்கிறது.”

ஆகவே நாம் ஆசைகளுக்கு இடங்கொடுக்காமல், பகவத்பாதாளின் புனிதமான உபதேசங்களின்படி நடந்து, வாழ்க்கையின் குறிக்கோளை அடைய வேண்டும்.

வாழ்வின் குறிக்கோள்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply