அவயங்கள் பயன்பாடு: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

Bharathi theerthar
Bharathi theerthar
Bharathi theerthar

நமது உடலிலுள்ள அவயவங்கள் எல்லாமே இறைவனை வழிபடுவதற்காகத்தான் இருக்கின்றன. ஆதிசங்கரர்,
ஸர ரஸனா தே நயனே தாவேவ கரெள ஸ ஏவ க்ருதக்ருத்ய: I
யா யே யெள யோ பர்கம் வததீக்ஷேதே ஸதார்சத: ஸ்மரதி II
எனக் கூறியிருக்கிறார்.

நம்முடைய நாக்கு பகவானுடைய நாமங்களைச் சொன்னால்தான் அதற்கு பவித்ர தன்மையே வரும்.. வேறு விஷயங்கள் பேசுவதால் அது பவித்ரம் அடையாது.

இறைவனுடைய திவ்ய மங்கள உருவத்தைக் கண்டால்தான் நம் கண்களுக்குப் புனிதம் ஏற்படும்.. மற்ற விஷயங்களைப் பார்ப்பதனால் அல்ல.

நம்முடைய கைகள் பகவானைப் பூஜிப்பதற்காகத்தான் இருக்கின்றன.. பகவானைப் பூஜை செய்யாத கைகளை “கைகள்” என்றே அழைக்க முடியாது.

இதேபோல், நமது மனம் இறைவனது பாதாரவிந்தத்தையே எப்போதும் சிந்திக்க வேண்டும், இவ்வாறு ஒருவன் தன் எல்லா அவயவங்களையும் இறை வழிபாட்டிற்கே செலவிட்டானேயானால் அவன் தன்யன்.

அவயங்கள் பயன்பாடு: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply