பணத்தாசை: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

Bharathi theerthar - 3
Bharathi theerthar - 2

உலகில் நாம் பல்வேறு வஸ்துக்களைப் பார்க்கிறோம். அவற்றில் ஒன்றைக் காட்டிலும் வேறு ஏதாவது ஒன்று புதிதாகவும் சிறந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், “எந்தப் பொருள், வேறு எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்ததாகவும் உயர்ந்ததாகவும் இருக்கிறது?” என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கான பதில் ஒரேமாதிரி இருப்பதில்லை.

வெவ்வேறு ஜனங்கள் வெவ்வேறு விதமாகப் பதிலளிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள், “பணம் தான் சிறந்தது; பணமில்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால், பணம் மட்டும் இருந்துவிட்டால் எதையும் நாம் சாதித்து விடலாம்” என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள்.

பணமானது ஒரே இடத்தில் எவ்வளவு காலம்தான் நிலையாக இருக்கும்? ஒருவன் பெரிய சக்கரவர்த்தியாக இருப்பினும், சில காலத்தில் அவன் பிச்சைக்காரனாக ஆகி பிச்சை பாத்திரத்தோடு திரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதனால்தான்.
ப்ராதர் ய ஏவ ஜகதீதலசக்ரவர்தீ
ஸாயம் ஸ ஏவ விபினே ஜடிலஸ்தபஸ்வீ
என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது,

“காலையில் மிகப் பெரிய சக்கரவர்த்தியாக இருந்த அதே மனிதன் மாலையில் காட்டில் துறவியாவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்பதே இதன் பொருள். பணத்தை நம்பிக் கொண்டிருந்தோமேயானால் நாம் முட்டாள்கள் ஆகிவிடுவோம்.

பணத்தாசை: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply