மானச பூஜை: கண்ணனை மனதில் வைத்து பூஜித்து அருள் பெறுக!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

e0aeaee0aebee0aea9e0ae9a e0aeaae0af82e0ae9ce0af88 e0ae95e0aea3e0af8de0aea3e0aea9e0af88 e0aeaee0aea9e0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb5

krishnan
krishnan
krishnan

மானஸ பூஜா !

1.ஹ்ருதம்போஜே க்ருஷ்ண: ஸஜலஜலதச்யாமலதனு:
ஸரோஜாக்ஷ: ஸ்ரக் முகுடகடகாத்யாபரணவான்
சரத்ராகாநாதப்ரதிமவதன: ஸ்ரீமுரலிகாம்
வஹந்த்யேயோ கோபீகண பரிவ்ருத: குங்குமசித :

நீருண்ட முகில்போல் கரிய திருமேனியும், தாமரைக்கண்களும், வன மாலையும், கிரீடம், கங்கணம் முதலிய ஆபரணங்களும் கொண்டவராய், சரத்கால பௌர்ணமீ சந்திரனை யத்த முகத்துடன் கோபியர் புடை சூழ, குங்குமாங்கிதரான ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதுபவராக மனதில் தியானிக்கவேண்டும்.

2.பயோஷிம்போதே ர்த்பாத் மம ஹ்ருதய மாயாஹி பகவன்
மணிவ்ராதப் ராஜத்கனகவரபீடம் பஜ ஹரே
ஸுசிஹ்நௌ தே பாதௌ யதுகுல நேநேஜ் ஸுஜலை :
க்ருஹாணேதம் தூர்வாதல ஜலவதர்க்யம் முரரிபோ

ஹேபகவன் பாற்கடல் தீவிலிருந்து என் ஹ்ருதயத்தில் குடி கொள்ளலாம். ஹேஹரே பல ரத்னக்கற்கள் இழைத்த தங்க பீடத்தை அமர்ந்தருள்ராக. நல்ல ஜலங்கொண்டு பத்ம-சக்ர-அடையாளம் கொண்ட உமது சரணங்களை அலம்பி தூய்மைப் படுத்துகிறேன். ஹேமுரரிபோ இளம் புல்லடங்கிய அர்க்யத்தை ஸ்கரிக்கலாமே

3.த்வமாசாமோபேந்த்ர த்ரிதஸரிதம்போsதிசிரம்
பஜஸ்வேம் பஞ்சாம்ருத பல ரஸாப்லாவ மகஹன்
த்யுநத்யா: காலிந்த்யா அபி கனக கும்பஸ்திததம்
ஜலம் தேந ஸ்நானம் குரு குரு குருஷ்வாசமநகம்
ஹே உபேந்திர

குளிர்ந்த தேவலோக கங்கைத் தண்ணீரை ஆசமநம் செய்யலாமே பாபம் நீக்கும் பரமனே இந்த பஞ்சார்த பழரஸஸ் நானத்தை ஏற்கலாமே இதோ இது ஆகாசகங்கையினினிறும், யமுனையிலிருந்தும் தங்கக்குடத்தில் சேகரித்த ஜலம் உள்ளது. இதனால் ஸ்நானம், ஆசமனம் செய்யலாமே.

4.தடித்வர்ணே வஸ்த்ர பஜ விஜயகாந்காகிஹரண
ப்ரலம்பாரிப்ராத: ம்ருதுல முபதம் குரு கலே
லலாடே பாடீரம் ம்ருகமதயுதம் தாரய ஹரே
க்ருஹாணேதம் மால்யம் சததல துலஸ்யாதி ரசிதம்
ஹேலக்ஷ்மீகாந்த

பாபங்களை நீக்கும் பலராமன் தம்பியே ன்னலையத்த இந்த இரண்டு வஸ்திரங்களையும், ம்ருதுவான உபசச்தையும் ஏற்று
அருளவேண்டும். ஹேஹரே நெற்றியில் கஸ்தூரி கலந்த இந்த சந்தனத்தை இட்டுக் கொள்ளலாம். தாமரை, துளஸி முதலியவற்றாலான இந்த மாலையையும் தரித்துக் கொள்ளலாம்.

5.தசாங்கம் தூபம் ஸத்வரத சரணாக்ரேஷிர்பிததம்
முகம் தீபேநேந்துப்ரப விரஜஸம் தேவ கலயே
இமௌ பாணீ வாணீபதிநுத ஸகர்பூர ரஜஸா
விசோத்யாக்ரே தத்தம் ஸலிலதமாசாம ந்ருஹரே

நல்லோருக்கு வரமருளும் தேவ தசாங்கம் கமழும் இந்த தூபம் உமது திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்படுகிறது. சந்திரக்கலையழகுடையோனே இந்த தீபத்தினால் உமது முகத்தை விளக்கம் செய்கிறேனே பிரமன் போற்றும் பரமனே கற்பூரம் நிறைந்த பொடியால் கைகளை சுத்தம் செய்து இந்த நீரைப்பருகலாமே

6.ஸதாத்ருப்தான்னம் ஷட்ரஸவதகிலவ்யந்ஜனயுதம்
ஸுவர்ணாமத்ரே கோக்ருதசக்ஷகயுக்தே ஸ்திததம்
யசோதாஸ¨நோ தத்பரமதயயாசான ஸகிபி :
ப்ரஸாதம் வாஞ்சத்பி: ஸஹ ததனு நீரம் பிப விபோ

ஏ யசோதையின் மைந்தனே ஆறுசுவை கொண்டதும், அனைத்து வ்யஞ்ஜனங்களடங்கியதும், தங்கத்தட்டில் பரிமாறியதும், பசுநெய்க்கிண்ணத்துடன் கூடியதுமான இந்த அன்னத்தை திருப்திவரும் வரை பூஜிக்கலாமே உடன், உமது பிரசாதம் வேண்டுமென அவா கொண்ட நண்பர்களையும் சேர்த்து சாப்பிட்ட பின் தண்ணீரைப் பருகலாம்.

7.ஸகூர்ணம் தாம்பூலம் முகசுசிகரம் பக்ஷய ஹரே
பலம் ஸ்வாத ப்ரீத்யா பரிமலவதாஸ்வாதய சிரம்:
ஸபர்யா பர்யாப்த்யை கனகமணி ஜாதம் ஸ்திததம்
ப்ரதீபைராராதிம் ஜலதிதநயாச்விஷ்ட ரசயே

ஹேஹரே வாய்சுத்தி செய்யும் பாக்குப்பொடி கலந்த தாம்பூலத்தை உட்கொள்ளலாமே வாஸனையுள்ள பழங்களையும் உவகையுடன் ருசித்து சாப்பிடலாமே பூஜை பூர்த்தியாவதையட்டி தங்கம், இரத்தினம் இவையுடன் தீபங்களும் காட்டி ஆரார்திகாட்டி உபசரிக்கிறேன்.

8.விஜாதீயை: புஷ்பைரதிஸுரபிபிர்பில்வதுலஸீ-
யுதைஸ்சேமம் புஷ்பாஞ்ஜலிமஜித தேமூர்த்நி நிததே
தவ ப்ராதக்ஷிண்ய க்ரமண மகவித்வம்ஸி ரசிதம்
சதுர்வாரம் விஷ்ணோ ஜநிபதகதேஸ்சாந்த விதுஷா

மணங்கமழும் பற்பல புஷ்பங்களும், பில்வம், துளஸி கலந்ததுமான இந்த புஷ்பாஞ்ஜலியை உமது சிரஸில் வைத்து மகிழ்கிறேனே. ஹேவிஷ்ணோ இனி பிறப்பு வேண்டாம் என நம்பி நான்கு முறை உமக்கு பிரக்ஷிணம் செய்து எனது பாபங்களை நீக்கிக் கொள்கிறேனே.

9.நமஸ்காரோsஷ்டாங்க: ஸகலதுர்த த்வம்ஸனபடு:
க்ருதம் ந்ருத்யம் கீதை ஸ்துதிரபி ரமாகாந்த த இயம்
தவ ப்ரீத்யை பூயாத் அஹமபிச தாஸஸ்தவ விபோ
க்ருதம் சித்ரம் பூர்ணம் குரு குரு நமஸ்தே ஷிஸ்துபகவன்

ஹேபகவன் அஷ்டாங்கங்களுடன் நான் செய்யும் நமஸ்காரம் எல்லா பாபங்களையும் நீக்க வல்லது. ஹேலக்ஷ்மீகாந்த ந்ருத்யம், கீதம், ஸ்தோத்ரம் முதலியனவும் நான் செய்யும் இவை உனக்கு மகிழ்ச்சி தருவதாக ஆகட்டும். உமக்கு நமஸ்காரம். இதில் ஏதாவது குறை இருக்குமானால் அதை நீக்கி பூர்ணமாக்கிக் கொள்ளவேண்டும்.

10.ஸதாஸேவ்ய: க்ருஷ்ண: ஸஜலகனநீல: கரதலே
ததாநோ தத்யந்நம் ததனு நவநீதம் முரலிகாம்
கதாசித் காந்தாநாம் குசகலசபத்ராலிரசனா –
ஸமாஸக்த: ஸ்நிக்தைஸ்ஸஹ சிசுவிஹாரம்ரசயன்

நீருண்ட மேகம் போல் கருத்த மேனியழகன் கண்ணன். அவன் சில சமயம் காயில் தயிர் சாதத்தையும், மற்றொரு சமயம் வெண்ணை அல்லது புல்லாங்குழல் வைத்திருப்பான். மற்றமொரு சமயம், தன் வடது ஒத்த சிறுவரோடு சேர்ந்து விளையாடுவான். அதே சமயம் ப்ரியைகளின் மார்பகங்கள் பச்சைகுத்தி அழகுபடுத்துவான். அத்தகைய கண்ணன் சேவிக்க வேண்டியவன்

மானச பூஜை: கண்ணனை மனதில் வைத்து பூஜித்து அருள் பெறுக! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply