திருப்புகழ் கதைகள்: மகாசங்கல்பம்

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 142
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அதல விதல முதல் – பழநி
மஹாசங்கல்பம் -2

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமின: அஷ்டோத்தர பூஜாம் அஹம் அத்ய கரிஷ்யே

அதாவது – என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காகவும் இன்றைய இந்த சுபதினத்தில், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமிக்கு 108 நாமங்களை சொல்லிச் செய்யும் பூஜையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும்.

இதனையே சுருக்கமான சங்கல்பமாகச் செய்ய வேண்டுவதானால் – அதாவது ஒவ்வொரு அமாவாசையின்போது பிராமணர்கள் செய்யும் தர்ப்பண காரியத்தின்போது இப்படிச் செய்வார்கள். –

மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வார ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முகூர்த்தே ஆத்யப்ரஹ்மண꞉ த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஸதிதமே கலியுயகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே மேரோ: தக்ஷியணே அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி³ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷருதௌ ஶ்ராவண மாஸே ஶுக்ல பக்ஷே அமாவாஸ்யாம் ஶுபதிதௌ பானுவாஸர யுக்தாயாம் ஶ்ரவிஷ்டாநக்ஷத்ர யுக்தாயாம் ஸுபயோக சுபகரண யுக்தாயாம் ஏவங்குண விஸேஷேண விஶிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ . . . .

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

என்று இந்தச் சுருக்கமான சங்கல்பம் செய்யப்படும். அதாவது – இறைவனின் கட்டளைப்படி, முதலாவது பிரமனின், இரண்டாவது பரார்த்தத்தில், சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்) ப்லவ என்ற பெயருடைய வருடத்தில் அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… இந்தக் கர்மாவைச் செய்கிறேன் – என்பது இதன் பொருளாகும். இது சுருக்கமான சங்கல்பம்.
மஹா சங்கல்பம் என்பது மிக விரிவான சங்கல்பமாகும். இதனுள் காலம், இடம் பற்றிய தகவல்கள் இடம்பெறுகிறது. வரலாறு, புவியியல் ஆகியவற்றின் அறிவு இழையோடுகிறது. வடமொழில்யில் சொல்லப்படும் இதன் பொருள் பின் வருமாறு:-

ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷனும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலா ஆற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும், அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவருமாகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,

வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய; (உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்ற அறிவியல் சிந்தனை)

இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்மங்களும், அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகிய இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்; (எட்டு திசைகளையும் பாதுகாக்கும் அட்ட திக் கஜங்கள்)

அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்; (பூமிக்குக் கீழே உள்ளதாகக் கருதப்படும் உலகங்கள்)

புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம், சொர்க்கலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்; (பூமிக்கு மேலே உள்ளதாகச் சொல்லபடும் உலகங்கள்)

சக்கரவாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;

தொடர்ச்சியை நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: மகாசங்கல்பம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply