திருப்புகழ் கதைகள்: ஆகமங்கள்!

ஆன்மிக கட்டுரைகள்

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0ae86e0ae95e0aeaee0ae99

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 150
அவனிதனிலே பிறந்து – பழநி – ஆகமங்கள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வைகானச ஆகமம்

வைகானசம் விகநச முனிவரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த ஆகம நெறியினைப் பின்பற்றுவோர் வைகானசர் ஆவர். திருவேங்கடம் (திருப்பதி) திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்) போன்ற, திவ்யதேசங்களில் வைகானச அர்ச்சகர்கள்தாம் பெருமாளுக்கு ஆராதனம் செய்கிறார்கள். இவர்கள் வடகலை வைணவ சமயப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மூலவர் திருமேனியைத் தொடும் உரிமையுடையவர்கள் இவர்கள். இவர்களுக்கு உதவியாகப் பணிபுரியும் பட்டர்களுக்கும் மூலத்திருமேனியைத் தொடும் உரிமை இல்லை. இவர்கள் நெறி வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் இராமாநுசரையோ நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் திவ்வியப் பிரபந்தங்களை இவர்கள் ஓதுவதில்லை.

பஞ்ச சம்ஸ்காரம் (வைணவனாக எண்ணப்படுவதற்குத் தேவைப்படும் ஐவகைத் தூய்மைகள்) என்ற வைணவ தீட்சையை இவர்கள் பெறுவதுமில்லை. தாயின் கருவிலேயே இம்முத்திரை தங்களுக்கு இடப்பட்டுவிட்டது என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.

பரத்துவம், (வைகுண்டத்தில் உள்ள நிலை) வியூகம் (பாற்கடலில் உள்ள நிலை), விபவம் (அவதாரநிலை), அந்தர்யாமி (உயிரில் கரந்து நிற்கும் நிலை), அர்ச்சை (கோவில்களி்ல் குடிகொண்டுள்ள திருவுருவ நிலை) என்னும் வைணவ வழிபாட்டு நெறிகளில் அர்ச்சாவதாரத்தையே (கண்ணுக்குப் புலனாகும் பொருள்களாற் செய்யப்பெற்றுக் கோயில்களில் வழிபடப்பெறும் திருமேனிகளை வணங்குவதையே) வைகானசர் பின்பற்றுகின்றனர். பிற நெறிகளை ஏற்பதில்லை.

ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் காலத்தில் உருவான கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே வைகானசர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பணியாளராக நிலைபெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“எனவே தமிழ் நிலத்து நெறிகளில் காலூன்றாமல் தங்களது தனித் தன்மையினைக் காப்பவர்களாக (puritans) இவர்கள் உள்ளனர். இவர்கள் வடமொழி வேதங்களை மட்டும் ஏற்றுக்கொள்வதற்கும் அதுவே காரணமாதல் வேண்டும்” என்பது அறிஞர்களின் முடிவாகும்.

nandi deva
nandi deva

ஆகமங்களும் சமய வளர்ச்சியும்

பாரதநாட்டுச் சமயம் மற்றும் அனைத்துக் கலாசாரக் கோட்பாடுகளுக்கும் வேதங்கள் ஆணிவேராகத் திகழ்கின்றன. தெய்வவழிபாட்டிற்கும் தத்துவக் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கும் வேதங்களும் அவற்றை சார்ந்த நூல்களும் அடித்தளமாக அமைந்து அவற்றின் மேல் தொடக்கமில்லா காலந்தொட்டு பல பரிணாம வளர்ச்சிகள் நிகழ்ந்துவந்துள்ளன; இக்காலத்தும் அவ்வாறே நிகழ்ந்துவருகின்றன என்பதையும் எல்லோரும் அறிவர். வேதங்களைப் போன்றே ஆகமங்கள் என்றழைக்கப்படும் நூல்களும் நம்நாட்டுச் சமய வளர்ச்சிக்கும் அதைச் சார்ந்த கலைகளின் வளர்ச்சிக்கும் வேதநெறியுடன் சேர்ந்து பெரும்பங்கு ஆற்றி வருகின்றன.

இவ்விரு வகைப்பட்ட நூல்களும் பரமகாருண்யமூர்த்தியா‎ன சிவபெருமானால் அருளப்பட்டன என்பது சிவநெறியைப் பின்பற்றும் சான்றோர்களின் துணிபு. வேதங்கள் பொதுநூல்களாகவும், ஆகமங்கள் அவ்வச்சமயங்களைப் பி‎ன்பற்றுவோருக்குரிய சிறப்பு நூல்களாகவும் கொள்ளப்படுகின்றன. நாத்திகக் கொள்கைகள் என்றழைக்கப்படும் பௌத்தம், சமணம் ஆ‏கியவற்றுக்கும் தனித்தனியே ஆகமங்கள் இருந்து வந்துள்ளன.

ஆரம்ப காலத்தில் வேதங்களும் ஆகமம் எ‎ன்றழைக்கப்பட்டு வந்த‎ன என்பதை நியாயசூத்ரம், அத‎ன் பாஷ்யம் ஆகிய பழைய நூல்களிலிருந்து அறிகிறோம். சைவத்தின் பிரிவுகளான பாசுபதம், காளாமுகம், ஸோமஸித்தாந்தம் ஆகியவற்றிற்கும் ஆகமங்கள் இருந்தன. ஆனால் அவை காலப் போக்கில் அழிந்துபோயின.

அச்சைவ சமயங்களுக்கு ஆகமங்கள் இருந்தனவென்று நாம் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். மேலும், சைவசித்தாந்த ஆகமங்களில் சிலவற்றுள் குறிப்பாக தீப்தாகமத்தில் பாசுபதம் லகுலீசம் முதலான சைவப் பிரிவுகளின் ஆகமங்கள் அவற்றின் பெயர்களுடன் குறிப்பிடப்படுகின்றன. எனவே, சிவபெருமான் அருளால் தற்சமயம் எஞ்சியுள்ளவை சைவசித்தாந்த ஆகமங்கள், பைரவ ஆகமங்கள் மற்றும் வீரசைவ ஆகமங்களே.

vikhanasar
vikhanasar

வேதங்களில் பொதுவாகவும் சுருக்கியும் கூறப்பட்ட சிவவழிபாட்டு முறைகள், ஆகமங்களில் தீக்ஷை, சிவாலயம் அமைத்து வழிபாடாற்றுதல் முதலிய சைவர்களுக்கே உரிய தனிப்பட்ட விசேஷ சடங்குகள், மிக்க விரிவாக விளக்கப்படுகின்றன.

மனிதனாகப் பிறந்தவ‎ன் இவ்வுலகில் வாழ்ந்து பல ‏இன்பங்களை அனுபவிப்பதற்கும், முடிவில் வைராக்கியமடைந்து பரம்பொருளா‎ன சிவபெருமான் திருவடிகளை அடைவதா‎ன மோக்ஷத்தை அடைவதற்கும் ஆகமங்கள் வழிமுறைகளை வகுத்துக் கூறுகி‎ன்ற‎ன. ஆகமங்களைப் பொறுத்தவரை அவை நா‎ன்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  1. சைவச் சடங்குகளையும் சிவலிங்கவழிபாட்டையும் மேற்கொள்ளத் தேவையா‎ன தகுதியை வழங்கும் தீக்ஷை எ‎ன்னும் சிறப்புச் சடங்கைச் செய்யும் முறை, மந்திரங்கள், மற்றும் மண்டலங்கள் ஆகியவற்றைப் பற்றிய விரிவா‎ன செய்திகள் தீக்ஷை பெற்றவ‎ன் தினந்தோறும் ஆற்றவேண்டிய ஸ்நானம், சிவபூஜை முதலிய சடங்குகள், சிவபெருமா‎னுக்கு ஆலயம் அமைத்தல், அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல், திருவிழாக்களை நடத்துதல் ஆகிய பல செய்திகளை விளக்கும் கிரியாபாதம்.
  2. சைவர்கள் மேற்கொள்ளவேண்டிய பொதுவா‎ன ஒழுக்கங்கள், பதி‎னாறு ஸம்ஸ்காரங்கள், வருடந்தோறும் செய்யவேண்டிய சிராத்தம், அந்தியேஷ்டி ஆகிய‎‎ன சரியாபாதத்தில் விளக்கிக் கூறப்படும் செய்திகள்.
  3. எண்வகைச் சித்திகள் முதலா‎ன பற்பல சித்திகளைப் பெறவும், சிவபெருமானது அருளைப் பெற்று முடிவில் முத்திபெறவும் மேற்கொள்ளவேண்டிய யோகப் பயிற்சிகளையும், அதற்கு அடிப்படையாக மூலாதாரம் முதலிய ஷடாதாரங்கள், ‏இடை, பிங்கலை முதலா‎ன நாடிகள், தியா‎னம் செய்யும் முறை ஆகியவற்றை மிக விரிவாக விளக்குவது யோகபாதம்.
  4. பதி, பசு, பாசம் எ‎னும் முப்பொருளகள், அவற்றி‎ன் விரிவு, சிவதத்துவம் முதல் பிருதிவீ தத்துவம் ஈறா‎ன முப்பத்தாறு தத்துவங்களி‎ன் தோற்றம், ஸ்ருஷ்டி,யி‎ன் வகைகள், மோக்ஷத்தி‎ன் இலக்கணம், அதில் ஆ‎ன்மாவின் நிலை ஆகிய சைவத்தி‎ன் அடிப்படைத் தத்துவக்கோட்பாடுகள் ஞா‎னபாதம் எ‎ன்னும் வித்தியாபாதத்தில் விளக்கப்படுகி‎ன்றன.

திருப்புகழ் கதைகள்: ஆகமங்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply