பிதுர்க்களுக்கு ஒளி வழி காட்ட… தீபாவளியில் பட்டாசு வெடியுங்க..!

ஆன்மிக கட்டுரைகள்

e0aeaae0aebfe0aea4e0af81e0aeb0e0af8de0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae92e0aeb3e0aebf e0aeb5e0aeb4e0aebf

crackerss
crackerss
crackerss

சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா? தீபாவளிக்கு மத்தாப்பு அவசியம் கொளுத்த வேணடும்.

அதன் வெளிச்சம் நமது முன்னோர்களை சொர்க்கம் செல்ல உதவுகிறது. (ஆதாரம்)

தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.

“ஸ்மிருதி கௌஸ்” என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. …

“துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:

உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்”
என்ற இந்த ஸ்லோகத்தில் “துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, “உல்கா’ எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது.

அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் “பூத’ என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும்.

அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி. ‘தர்சம்’ என்ற வார்த்தை “அமாவாசை’யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை. இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம்.

காரணம் என்ன? “பித்ரூணாம்” என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது.

பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள்.

இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக “ப்ரதோஷ-காலத்தில் “உல்காதானம்” செய்வோம்.

उल्का-हस्ता-नराःकुर्युः-पितृणां-मार्गदर्शनम्।।
-“अग्नि-दग्धाश्च-ये-जीवाः-येप्यदग्धाः-कुले-मम ।
उज्ज्वल-ज्योतिषा-दग्धाः-ते-यान्तु-परमां-गतिम् ।
यमलोकं-परित्यज्य-आगता-ये-महालये ।
उज्ज्वल-ज्योतिषा-वर्त्म-प्रपश्यन्तु-व्रजन्तु-ते ||

உல்கா=நெருப்புடன்-கூடிய-கட்டை; (தற்காலத்தில்=மத்தாப்பு)

மேலும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,

“நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா” என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

-“दीपैर्नीराजनादत्र-सैषा-“दीपावली”-स्मृता”।
-“दीपान्दत्वा-प्रदोषे-तु-लक्ष्मीं-पूज्य-यथाविधि…।
भक्त्या-प्रपूजयेत्-“देवीं”-अलक्ष्मी-विनिवृत्तये ।।

ப்ரமாணம் இல்லாமல் நம் முன்னவர்கள் செய்வதில்லை.!

பிதுர்க்களுக்கு ஒளி வழி காட்ட… தீபாவளியில் பட்டாசு வெடியுங்க..! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply