ஸ்ரீ கிருஷ்ணர்: லீலைகளுக்கான அவதாரம்!

ஆன்மிக கட்டுரைகள்
krishnar 1 - Dhinasari Tamil

தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை ஒழிக்க எடுத்துக்கொண்ட கிருஷ்ணாவதாரத்தில், பகவான் இளம் பிராயத்திலிருந்தே அனேக லீலைகளை புரிந்தார்.

பகவான் பிறந்த உடனேயே தன் விஸ்வரூபத்தை தன் தாயாருக்கு வெளிப்படுத்தினார். மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் பொழுது, பூதனா என்ற அரக்கியையும் மேலும் பல அரக்கர்களையும் கொன்றார். பகவத்கீதையின் வேதாந்த தத்துவத்தை உபதேசித்து எல்லா உலகத்துக்கும் அருள்புரிந்தார்.

பாண்டவர்கள் பக்கம் இருந்து அவர்களுடைய எல்லாக் கஷ்டங்களிலும் ஸகாயம் புரிந்து ‘தர்மம் எப்பொழுதும் ஜெயிக்கும்’, ‘தர்மம் இருக்கும் இடத்திலேயே பகவான் இருக்கிறார்’ என்ற உண்மைகளுக்கும் ஒரு நிரந்தர அந்தாக்ஷியாக அவர் விளங்கினார்.

ஸ்ரீகிருஷ்ணர் கோபிகைகளுடன் ராஸலீலைகளில் ஈடுபட்டார் என்பதை, லௌகீக அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. முந்திய ராமாவதாரத்தில் மஹரிஷிகள் பலர் தங்களுக்கு பகவானுடைய நிஜ ரூபத்தில் அவரை பூஜிக்கும் பாக்கியம் வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். பகவான் அவர்களுடைய வேண்டுகோளை அடுத்த அவதாரத்தில் நிறைவேற்றுவதாக வாக்களித்தார். அதனால் மஹரிஷிகள் உலகத்திற்குள் கோபிகைகளாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகவும் வந்தார்கள். இதை நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து அறிந்து கொள்கிறோம். பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் ஸத்யத்தைப் பற்றி கொடுத்த உபதேசங்களை நாம் பின்பற்றி சிரேயஸ்களை அடைய வேண்டும்.

சரணடைந்தவர்களை காப்பதில் கல்ப விருக்ஷமாகவும், ஞான முத்தரையை வைத்திருப்பவரும், கையில் பிரம்பை பிடித்திருப்பவரும் கீதை என்ற அமுதத்தை கறந்து அளித்திருப்பவருமான ஸ்ரீ கிருஷ்ணருக்கு வணக்கங்கள்..

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

 *ஸ்ரீ கிருஷ்ணர்*

ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply